ஆண்மைக்கு உறுதியளிக்கும் இந்த கடலை பற்றி தெரியுமா?

0
1348

ஆண்மையை அதிகரிக்க தேவையற்ற பக்க விளைவுகள் கொண்ட மருந்துகளை எடுத்து கொள்வதை விட இயற்கை முறையில் இதற்கென்றே பல உணவுகள் இருக்கின்றன. இதனை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆண்மை பலம் பெருகுவதோடு உடல் ஆரோக்கியம் சீர் பெறுகிறது.

வேர்க்கடலை ஆண்மை பலம் பெருக பெரிதும் உதவி செய்கிறது. சைவமாக இருப்பின் வேர்க்கடலை அசைவ உணவுகளுக்கு சரிசமமான அளவில் சத்துக்கள் கொண்டிருப்பதால் ஆண்கள் இதனை அடிக்கடி சேர்த்து வர நன்மைகள் பல அடைய முடியும்.

ஆண்மையையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்க வேர்க்கடலையை எந்தெந்த முறையில் சாப்பிட்டால் நல்லது என்பதை இப்போது பார்க்கலாம்.

வேர்க்கடலையை பொதுவாக பச்சையாகவோ வறுத்தோ சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவது நல்ல பலன் தரும். இதனால் இதன் சத்துக்கள் வீணாகாமல் இருக்கும்.

வேர்க்கடலை மூலம் கிடைக்கும் கடலை எண்ணெயை சிறிதளவு உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் பிரச்சனைகள் மல சிக்கல் போன்றவை நீங்குகின்றன.

பாலுடன் ஒரு ஸ்பூன் கடலை எண்ணெய் கலந்து அதனை அருந்தி வருவதன் மூலம் தவறான உறவு பழக்கங்களால் ஏற்படும் பால்வினை நோய்கள் கூட குணமாகின்றன.

வேர்க்க்கடலையை தோல் நீக்கி இடித்து பொடியாக்கி அதனை பாலில் வேகவைத்து அந்த பாலையும் வேர்கடலையையும் உண்டு வர ஆண்மை பலம் பெருகும். விந்தணுக்கள் கூடும்.

மூளை திறன் நன்றாக இருக்க வேர்க்கடலை உதவுகிறது. வேர்க்கடலையில் உள்ள சத்துக்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியும் ஆற்றலையும் நமக்கு வழங்குகிறது. ஆகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அருந்தலாம்.

வேர்க்கடலை உடலில் காயங்கள் மூலம் ஏற்படும் வீக்கங்கள் ஆகியவற்றை விரைவில் நீக்கும் தன்மை கொண்டது. ஆகவே அடிபட்ட நேரங்களில் இதனை உண்டு வந்தால் பலன் கூடும்.

வேர்க்கடலையை உண்பதன் மூலம் சர்க்கரைநோயாளிகளுக்கு மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் குறைகின்றன. இதயம் பலமாகிறது.

வேர்க்கடலை சருமத்தின் தோழனாக இருந்து செயல்படுகிறது . இறந்த செல்களை நீக்குகிறது. ஆகவே வேர்க்கடலையை அடிக்கடி உண்பதன் மூலம் நீங்கள் அழகாகலாம்.

புற்று நோய் வராமலும் இதய நோய்களில் இருந்தும் வேர்க்கடலை நம்மை காக்கிறது.

மேலும் இதில் புரதத்தின் அளவு அதிகமாக இருப்பதால், புரத சத்து குறைபாடுள்ளவர்கள் இந்த வேர்க்கடலையை அடிக்கடி உணவாக சேர்த்து வர பலன் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: