ஆணுறுப்பு வழியாக நுழைக்கப்பட்ட மொபைல் சார்ஜர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீர் பையிலிருந்து வெளியேற்றம்..!

0

ஆண்குறி வழியாக நுழைக்கப்பட்ட மொபைல் சார்ஜர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீர் பையிலிருந்து வெளியேற்றம்..!

அசாமில் 30 வயதுடைய இளைஞரொருவர் தனது பாலியல் சுகத்திற்காக ஆண்குறி வழியாக பல்வேறு பொருட்களை சொருகும் பழக்கம் உடையவர் அந்தவகையில் மொபைல் போன் சார்ஜர் வயரை உட்செலுத்தியிருக்கிறார். அந்த வயர் அவரது சிறுநீர்ப்பையை அடைந்துள்ளது அதனால் அவருக்கு கடுமையான‌ வயிற்றுவலி ஏற்பட வேறு வழி இன்றி வைத்தியசாலையை நாடியுள்ளார்.

மருத்துவர்கள் உடனே எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது சிறுநீர்ப்பையில் இருப்பது தெரியவந்தது. ஆனால் அந்த இளைஞன் தான் வாய் வழியாக சார்ஜர் வயரினை விழுங்கியதாக பொய் கூறியுள்ளார். சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் வெற்றிகரமாக 2 அடி நீளமுள்ள வயரினை எடுத்துள்ளனர்.

இது குறித்து டாக்டர் இஸ்லாம் ‘பாலியல் இன்பம் பெற மனிதன் தனது ஆண்குறி வழியாக பொருட்களை செருகும் பழக்கம் சிறுநீர்ப்பை சுய இன்பம் அல்லது சிறுநீர்ப்பை ஒலித்தல் என்று அழைக்கலாம். அவரது விஷயத்தில், சிறுநீர்ப்பையில் இணைக்கப்பட்ட தண்டு சிக்கி கொண்டது எனது 25 ஆண்டுகால மருத்துவ வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு வழக்கை நான் கண்டதில்லை’ என்று கூறியுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 06.06.2020 Today Rasi Palan 06-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 07.06.2020 Today Rasi Palan 07-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!