ஆண்கள் தாம்பத்தியத்திற்கு முன் தினமும் 3 பேரீச்சைகளை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

0
2243

ஆண்கள் தாம்பத்தியத்திற்கு முன் தினமும் 3 பேரீச்சைகளை சாப்பிட்டு வந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும்?

தாம்பத்தியம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான அங்கமாகும். பலரின் வாழ்வில் அதீத நெருக்கத்தையும், மோசமான பிரிவையும் ஏற்படுத்த தாம்பத்தியம் ஒரு காரணியாகவே இருக்கிறது. இன்று தாம்பத்திய வாழ்வு சிறப்பாக இல்லை என்று பலர் விவாகரத்து செய்து கொள்கின்றனர். இப்படி ஒருவரின் வாழ்வை புரட்டி போடும் அளவிற்கு இல்லறம் என்பது மனிதனின் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாகவே உள்ளது.

இதை சரிவர நிறைவேற்ற இயலாமல் ஆண்களும் பெண்களும் தவித்து வருகின்றனர். பெண்களுக்கு ஒரு விதத்தில் பிரச்சினை என்றால், ஆண்களுக்கு வேறு வழியில் இது பிரச்சினையை உண்டாக்குகிறது. பல ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு, விந்தணு எண்ணிக்கை குறைவு, ஈடுபாடு இல்லாமை… இப்படி பல பிரச்சனைகள் ஆண்களுக்கும் உண்டு. இவற்றிற்கு தீர்வை தர கூடிய தன்மை ஒரு சிறிய பழத்திற்கு உண்டு என ஆய்வுகள் தற்போது கண்டு பிடித்துள்ளன. அந்த பழம் என்ன..? என்பதையும் அதை எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும் என்பதையும், இதனால் ஆண்களுக்கு உண்டாகும் நற்பயன்கள் என்னென்ன என்பதையும் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

பல வித நன்மைகளை உடலில் உண்டாக்க கூடிய அந்த பழத்தின் பெயர் பேரீச்சை. அன்றாடம் பேரீச்சை சாப்பிடுவதால் எண்ணற்ற பயன்கள் கிடைக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் ஆண்கள் பேரீச்சையை சாப்பிட்டால் அவர்களின் தாம்பத்திய வாழ்வில் ஏராளமான மாற்றங்களை உண்டாகுமாம்.

ரம்ஜான் போன்ற பண்டிகை நாட்களில் முஸ்லிம்களின் கலாசாரப்படி பேரீச்சையை வைத்தே அவர்களின் நோம்பை முடித்து கொள்வார்கள். இது உடலுக்கு அதிக ஆற்றலை தர கூடிய ஒன்று என்பதாலே இவர்கள் இதனை உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளனர். வரலாற்று பூர்வமாகவும் பேரீச்சைக்கென்று ஒரு தனித்துவம் எப்போதும் இருக்கும்.

திருமணமான ஆண்கள் பேரீச்சையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுவின் ஆரோக்கியம் அதிகரிக்குமாம். இந்த பழம் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் உயர்த்தும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதை இரவில் படுக்க போகும் முன் சாப்பிட்டால் நல்ல பலனை ஆண்களுக்கு தருமாம்.

ஆண்களின் அந்தரங்க உறுப்பில் சீரான ரத்த ஓட்டம் இல்லையெனில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தும். சரியான தாம்பத்திய வாழ்வு பலருக்கு இல்லாமல் போய்விடுவதற்கு இதுவும் ஒரு காரணமே. பேரீச்சையை இரவில் சாப்பிட்டு வந்தால் அந்தரங்க உறுப்புகளில் நல்ல இரத்த ஓட்டம் இருக்கும். எனவே, கலவியில் ஆண்கள் சிறப்பாக செயல்படலாம்

தாம்பத்தியம் என்பது ஆண், பெண் இருவரின் சம்பந்தத்தோடு நடக்க வேண்டும். இல்லையெனில் அது ஆரோக்கியமான உறவை ஏற்படுத்தாது. கலவியில் நாட்டம் இல்லாமல் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிக ஈடுபாட்டை தாம்பத்தியத்தில் ஏற்படுத்த இரவில் பேரீச்சையை சாப்பிட்டு வந்தால் போதும்.

ஆணுறுப்பு சிறியதாக இருந்தால் தாம்பத்திய வாழ்வில் பலவித பிரச்சினைகள் உண்டாகும். ஆணுறுப்பை பெரியதாக்கவும், பெண்களின் மார்பகத்தின் அளவை சரியான அளவில் கொண்டு வர பேரீச்சை அருமருந்தாக உதவுகிறதாம். இதற்கு ஆண், பெண் இருவரும் படுக்கைக்கு செல்லும் முன் பேரீச்சையை சாப்பிட்டு வரவும்.

பல தம்பதிகள் பிரிவிற்கு இந்த ஹர்மோன்களும் ஒரு முக்கிய காரணியாகவே உள்ளது. ஆண்களின் ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோன் சரியான அளவில் உற்பத்தி ஆகவில்லை என்றால் மலட்டு தன்மை ஏற்படும். இந்த பிரச்சினையில் இருந்து உங்களை காக்க பேரீச்சை உள்ளது. இதனை தினமும் இரவில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அடையலாம்.

பலருக்கு தாம்பத்திய வாழ்வில் இன்பம் என்பது இல்லாமல் இருக்கும். இதற்கு காரணம் கலவியின் போது திருப்தி அடையாமல் இருப்பதே. இருவரும் அதிக நேரம் கலவு கொள்ளவும், சிறப்பான முறையில் செயற்படவும் பேரீச்சை உதவுகிறது.

மேற்சொன்ன தீர்வுகள் அனைத்துமே இரான் நாட்டின் ஆய்வின் படி கண்டறியப்பட்டதே. பேரீச்சை முழுக்க முழுக்க ஆண்களின் அனைத்து வித குறைபாட்டிற்கு தீர்வை நல்கும் என ஷிராஸ் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றது.

எந்த ஒரு உணவாக இருந்தாலும் அதன் அளவை பொருத்து தான் அது மருந்தாகவும், விஷமாகவும் மாறும். அந்த வகையில் பேரீச்சையையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு கொண்டே இருக்க கூடாது. ஒரு நாளைக்கு 3 முதல் 5 பேரீச்சையை சாப்பிட்டு வந்தால் மேற்சொன்ன பயன்கள் அனைத்துமே கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெளியான அதிரடி அறிவிப்பு! ஜனாதிபதி வேட்பாளர் யார்!
Next articleவெளியான அதிர்ச்சி தகவல்! காதலி சமந்தாவை ரூம் போட்டு சீரழித்த டாக்டர்!