ஆண்கள் கருத்தடை முறையை பற்றி கட்டாயம் மருத்துவரிடம் கேட்க வேண்டிய அந்த 9 கேள்விகள் இதோ!

0
969

அறிவியல் வளர்ச்சி என்னதான் விண்ணை தொட்டாலும் நாம் அதனை முழுமையாக புரிந்து கொண்டு பயன்படுத்தும் வரை, இதனால் பெரிய அளவில் மாற்றங்கள் உண்டாக போவதில்லை. குறிப்பாக மருத்துவ துறையில் பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளன. ஆனால், நமக்கு தெரிந்தவை அறிந்தவை மிக சில மட்டுமே. நம்மில் பலருக்கு செக்ஸ் பற்றிய சரியான புரிதல், குழந்தைகளை பெற்றெடுத்தற்கு பின்பு கூட ஏற்படுவதில்லை.

இதற்கு பல காரணிகள் இருந்தாலும் நம் அறியாமையை மூல காரணமாக சொல்லலாம். இந்த அறியாமை நிலை தான் இன்று மோசமான சூழலுக்கு நம் சமூகத்தை தள்ளி உள்ளது. குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பு, கருத்தடை போன்ற எதை பற்றிய சரியான புரிதலும் நமக்கு கிடையாது. இத்தகைய நிலை எப்படி அடுத்த தலைமுறையை அறிவார்ந்த சமூகமாக மாற்றும்? என்பதே கேள்விக்குறி. மற்றவற்றை காட்டிலும் பலர்க்கும் கருத்தடை பற்றிய புரிதலும், விழிப்புணர்வும் மிக குறைவு. நாம் முன்கூட்டிய சில கேள்விகளை தயார் செய்து கொண்டு அதை மருத்துவரிடம் கேட்பது சிறந்தது. இந்த பதிவில் ஆண்கள் கருத்தடையை பற்றிய மருத்துவரிடம் கேட்க வேண்டிய சில முக்கியமான கேள்விகளையும், பெண்களுக்கள் கேட்க வேண்டிய கேள்விகளையும் தெரிந்து கொள்ளலாம்.

எதை பற்றிய புரிதலும் இல்லாமலே நாம் தாம்பத்திய உறவில் ஈடுபடுகிறோம். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவசியம் செக்ஸ் பற்றிய புரிதல் இருத்தல் வேண்டும். இல்லையேல் இவை பல்வேறு உடல் சார்ந்த மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை உருவாக்கி விடும். இதை பற்றிய கேள்விகளை மருத்துவரிடம் கேட்டு தெளிவாகி கொள்வது நல்லது.

கேள்வி #1 மருத்துவரிடம் ஆண்கள் கருத்தடை பற்றிய கேள்வி கேட்கும் போது முதலில் எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் பேச வேண்டும். குறிப்பாக நீங்கள் 1 வாரத்திற்கு எத்தனை முறை உறவு வைத்து கொள்வீர்கள், உங்களின் தேவை என்ன, விருப்பம் என்ன என்பதை மறைக்காமல் கேட்டு விடுங்கள்.

கேள்வி #2 கட்டாயமாக எந்த கருத்தடை முறை உங்களின் உடலுக்கு ஏற்றதாக இருக்குமா என்பதை கேளுங்கள். மாத்திரைகள் சரியாக இருக்குமா, இல்லை காண்டம் போன்றவற்றை பயன்படுத்துவது சரியாக இருக்குமா என்பதை தெளிவு படுத்தி கொள்ளுங்கள். கூடவே, பெண்கள் எத்தகைய முறையை கடைபிடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதையும் கேட்டு விடுங்கள்

கேள்வி #3 கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து எடுத்து கொள்ள வேண்டுமா? இல்லை அதற்கான கால அளவு உள்ளதா? என்பதை கேட்க வேண்டும். மேலும் எந்த கருத்தடை முறை சிறப்பான பலனை தரும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

கேள்வி #4 ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது கருத்தடைக்காக பயன்படுத்த கூறிய காண்டம்கள் கிழிந்து விட்டால் ஏதேனும் பிரச்சினை உண்டாகுமா? அல்லது இதனால் கருத்தடை பாதிப்பு ஏற்படுமா? என்பதை அவசியம் தெளிவாக கேட்டு விடுங்கள். ஏனெனில், பலருக்கு கருத்தடை முறைகள் கைகொடுக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

கேள்வி #5 உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே யாருக்காவது கருத்தடையினால் பாதிப்பு உண்டாகியுள்ளதா? என்பதை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அப்போது தான் அவர் உங்களுக்கு கருத்தடை சரியாக வருமா? இல்லை இதில் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா? என்பதை கூற இயலும்.

கேள்வி #6 கருத்தடை மாத்திரைகளை சாப்பிட்டால் பால்வினை சார்ந்த நோய்கள் ஏற்படாதா? என்பதை கேளுங்கள். ஏனெனில், கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால் பாலியல் சார்ந்த நோய்கள் பரவாமல் இருக்காது. இதற்கு காண்டம் போன்றவை தான் சரியான தீர்வாக இருக்க முடியும்.

கேள்வி #7 நல்லதை மட்டும் கேட்டு விட்டு வந்து விடாதீர்கள். அவசியம் இதனால் உண்டாக கூடிய பாதிப்புகளையும் தெரிந்து கொள்ளுங்கள். எனவே, மருத்துவரிடம் கருத்தடை முறைகளை பயன்படுத்தினால் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதையும், இதிலிருந்து எப்படி காத்து கொள்வது என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

கேள்வி #8 கருத்தடை பற்றிய கேள்விகளில் பெரும்பான்மையானோர் இதை கேட்பதில்லை. அதாவது, கருத்தடையை விரைவாக்க ஏதேனும் வழிகள் உண்டா? என்பதையும் கேளுங்கள். இது சிலருக்கு கைகொடுக்கும். சிலருக்கு பயன் தருவதில்லை.

கேள்வி #9 கணவன் மனைவி இருவருக்கும் எது ஏற்ற கருத்தடை முறை, எவ்வளவு காலம் இதை பின்பற்ற வேண்டும், சரியான தீர்வு தரும் முறை எது போன்றவற்றையும் கேட்டு கொள்வது நல்லது. மேலும், இவை அனைத்திற்கும் முன் உங்களின் அன்றாட பழக்க வழக்கங்களை பற்றி மருத்துவரிடம் விவரிப்பது உகந்தது. மேற்சொன்ன கருத்தடை முறை பற்றிய கேள்விகளை அவசியமாக மருத்துவரிடம் கேட்க வேண்டும். இதை தவிர வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அதை பற்றியும் கேட்டு தெளிவு பெறுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 27.02.2019 புதன்கிழமை !
Next articleகாமெடி நடிகர் கிங் காங்கிற்கு இவ்வளவு அழகான குடும்பமா!