ஆண்களே! இந்த இரண்டையும் ஒன்னா சாப்பிட்டா, ஆண்மைப் பெருகும் தெரியுமா?

0

மார்கெட்டுகளில் விற்கப்படும் பல உணவுப் பொருட்களின் நன்மைகள் பற்றி நமக்கு தெரியாது. சில சமயங்களில், அந்த உணவுப் பொருட்களால் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல நன்மைகள் கிட்டும். அப்படிப்பட்ட சில உணவுப் பொருட்கள் தான் வெல்லம் மற்றும் வறுத்த கடலை. இந்த உணவுப் பொருட்களை பலரும் ஸ்நாக்ஸாக சாப்பிடும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் ஒருவர் தினமும் இவற்றை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா? இவைகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மட்டும் மேம்படுவதில்லை, அனைத்து வகையான நோய்களில் இருந்தும் விலகி இருக்கலாம். வறுத்த கடலையில் உடலுக்கு நன்மையளிக்கும் சத்துக்கள் ஏராளமாக உள்ளது. வறுத்த கடலை ஆண்கள் சந்திக்கும் பல பிரச்சனைகளை சரிசெய்வதோடு, உடலுக்கு வலிமையையும் அளிக்கும்.

வறுத்த கடலையில் உள்ள சத்துக்கள்

வறுத்த கடலையில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளது. இத்தகைய வறுத்த கடலையுடன் வெல்லத்தையும் உடன் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு பல நன்மைகள் கிட்டும். உங்களுக்கு இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியாதென்றால், இக்கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

விந்தணுக்கள்

வறுத்த கடலை மற்றும் வெல்லத்தை ஒன்றாக சாப்பிட்டால், உடல் வலிமையாக இருப்பதோடு, இன்னும் அதிகரிக்கும். வறுத்த கடலையை பாலுடன் சேர்த்து உட்கொண்டால், ஆண்களின் விந்தணுக்களின் தரம் மேம்படும்.

ஆண்மை பெருகும்

பாலியல் பிரச்சனை உள்ள ஆண்கள் வறுத்த கடலையை உட்கொள்வது மிகவும் நல்லது. அதிலும் வறுத்த கடலையை தேனுடன் சேர்த்து உட்கொண்டால், மலட்டுத்தன்மை நீங்கி, ஆண்மைப் பெருகும். தொழு நோய் உள்ளவர்கள் வறுத்த கடலையுடன் வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

தற்போது அடிக்கடி பலர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். வறுத்த கடலையை தினமும் உட்கொண்டு வந்தால், நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு, நோய்களின் தாக்குதல்களில் இருந்து விலகி இருக்கலாம். அதிலும் காலை உணவின் போது 50 கிராம் வறுத்த கடலையை, வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி மேம்பட்டு, நோய்கள் தாக்காமல் இருக்கும்.

பொலிவான முகம்

பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் முகம் பொலிவிழந்து சோர்ந்து காணப்படுகிறது என்று கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் தினமும் வறுத்த கடலையுடன் வெல்லத்தை சாப்பிட்டு வந்தால், முகப் பொலிவு மேம்படுவதோடு, சரும நிறமும் அதிகரிக்கும்.

உடல் பருமன் குறையும்

தினமும் வறுத்த கடலையை சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, வேகமாக எடை குறைவதன் மூலம், உடல் பருமன் குறையும். அதிலும் குண்டாக இருப்பவர்கள், தினமும் வறுத்த பார்லி பருப்பை உட்கொண்டு வந்தால், உடல் எடை வேகமாக குறைந்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

செரிமான பிரச்சனைகள் அகலும்

ஒருவர் செரிமான பிரச்சனைகளான மலச்சிக்கல், அசிடிட்டி போன்றவற்றால் அவஸ்தைப்பட்டு வந்தால், வெல்லத்துடன் வறுத்த கடலையை சாப்பிட, அப்பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இவற்றில் உள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

சிறுநீரக தொற்றுகள்

சிறுநீர் கழிக்கும் போது எரிச்சலை சந்திக்கிறீர்களா? அப்படியானால் வறுத்த கடலையை சாப்பிடுங்கள். இதனால் சிறுநீரக தொற்று பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபடலாம். அதிலும் வறுத்த கடலையை வெல்லத்துடன் சாப்பிட்டால், சுவையாக இருப்பதோடு, பல சிறுநீரக பிரச்சனைகளில் இருந்தும் விலகி இருக்க முடியும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது என ஆயுர்வேதம் கூறும் உணவுகள்!
Next articleஇரவில் மட்டும் இதையெல்லாம் செய்யவே கூடாதாம்! மீறினால் பின் விளைவுகள் பயங்கரம்!