ஆண்களின் விந்தணுவை அதிகரித்து ஆண்மை குறைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்..!

0

காய்கறிகள் என்றாலே இன்று பலரும் வெறுக்கும் அளவிற்கு வந்துவிட்டோம். வெளியில் கிடைக்கும் பலவகையான உணவுகளுக்கு அடிமையாகி வருகின்ற நாம், இதனால் பல நோய்களுக்கும், ஹார்மோன் குறைபாடுகளுக்கும் ஆளாகின்றோம். இந்த வகையில் ஆண் – பெண் என்ற வேறுபாடு சிறிதும் கிடையாது. இருப்பினும் பெண்களை காட்டிலும் ஆண்களே வெளி உணவுகளை அதிகம் உண்கிறார்கள் என்று சில உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதன் விளைவு ஊட்டச்சத்துக்கள் குறைந்து உடல் ரீதியாக ஆண்கள் எண்ணற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறார்கள். குறிப்பாக ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லையென்றால் உளவியல் சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்தும்.

இதன் முடிவு மன அழுத்தம், இதய நோய்கள் போன்றவற்றை தரும். ஒரு ஆணுக்கு மன அழுத்தம் அதிகமாகினால் ஆண்மை குறைவு, விந்து எண்ணிக்கையில் குறைவு போன்ற கொடுமையான சூழ்நிலைக்கு தள்ளப்படுவார். ஆண்களே… உங்களை இந்த பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற நம்ம வீட்டு உணவில் இந்த கேரட்டை அதிகம் சேர்த்தாலே போதும். இந்த பதிவில் கேரட் எவ்வாறு ஆண்மை குறைவு மற்றும் விந்து குறைபாட்டிற்கு உதவுகிறது என்பதை பார்ப்போம்.

பொதுவாக கேரட் என்றாலே கண்ணுக்கு மிகவும் நல்லது என்ற வழக்கு மொழி இருந்து வருகிறது. இது முற்றிலும் உண்மையும் கூட. எப்போதும் அதிக வண்ணங்கள் கொண்ட காய்கறிகள் உடலுக்கு பல நன்மைகள் தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரஞ்ச் நிறத்தில் உள்ள இந்த காயிலும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக வைட்டமின் எ கேரட்டில் அதிகம் உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் நலம் தரும். கேரட் கண்ணுக்கு மட்டும் நன்மை ஏற்படுத்த கூடியது அல்ல, அத்துடன் இன்று பல ஆண்கள் சிரமப்படும் விந்து குறைபாட்டையும் இது சரிசெய்கிறது.

100 g எடையுள்ள கேரட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இவையே.

கலோரிகள் – 41

நீர்சத்து – 88 %

புரதம் – 0.9 g

வைட்டமின் எ, கே1, பி6,இ

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்

பொட்டாசியம்

பயோட்டின்

உலகில் மிகவும் பிரபலமான ஆராய்ச்சி பல்கலைக்கழகமான ஹார்வர்டில் (Harvard University) ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கவும், வலுவாக வைக்கவும் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் ஒரு ஆச்சரியமான தீர்வு கண்டனர். 200 ஆண்களை கொண்டு குறிப்பிட்ட கால அளவில் இந்த ஆராய்ச்சியை செய்தனர். இதில் மஞ்சள், ஆரஞ்சு நிறமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை ஆண்கள் அதிகம் உண்டால் அவர்களின் ஆண்மை குறைவிற்கான பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றனர். குறிப்பாக கேரட்டை உண்ணும் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரித்து ஆண்மை குறைபாடு நீங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கேரட்டில் உள்ள கேரட்டினோய்ட்ஸ் (carotenoids) என்ற மூல பொருள் விந்து எண்ணிக்கையை அதிகரித்து மிகவும் வலுவுடன் இருக்க செய்கிறது. இதனால் ஒரு ஆணுக்கு விந்தணு கோளாறுகள் ஏற்படாது. மேலும் விந்துக்கள் சிதைவடையவும் செய்யாது. கேரட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்டஸ் ஆண்மை குறைவு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

உடலில் வைட்டமின் இ மற்றும் பொட்டாசியம் குறைவாக இருந்தால் விறைப்பு தன்மை ஏற்படும். கேரட்டில் இவை அதிகம் உள்ளதால் ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தன்மையை குணப்படுத்தும். அத்துடன் ஆணின் விந்தணு பெண்ணின் கரு முட்டைக்குள் மிக விரைவாக சென்று கருத்தரிக்க உதவும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் செல்களை புத்துணர்வூட்டி என்றும் இளமையாக வைக்கும்.

இன்று அதிக அளவில் ஆண்களுக்கு வரும் புற்றுநோய்களில் முக்கிய இடத்தில் இருப்பது ப்ரோஸ்டேட் (prostate cancer) கேன்சர்தான். வைட்டமின் எ குறைபாட்டால்தான் இந்த வகை புற்றுநோய்கள் வருகிறது. எனவே கேரட்டை அதிக அளவில் உணவில் சேர்த்து கொண்டால் இந்த புற்றநோய்யில் இருந்தும் தப்பிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பெரும்பாலான ஆண்கள் மிகவும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் இந்த மலசிக்கல்தான். தேவையற்ற உணவு பழக்கத்தால் உடலில் செரிமான மண்டலம் சீர்கேடு அடைந்து மலசிக்கல் ஏற்படுகிறது. தினமும் கேரட்டை உண்டால் இதில் உள்ள நார்சத்து எளிதாக உணவை செரிக்க செய்யும். எனவே இதன்மூலம் ஆண்கள் இந்த மலசிக்கலில் இருந்து விடுபடலாம்.

உடலில் கொலெஸ்ட்ரோல் அளவு அதிகரித்து இதயத்தின் செயல்பாட்டை குறைகிறது. தினமும் கேரட் ஜுஸ் குடிப்பவர்களை இதயம் சார்ந்த பல நோய்களில் இருந்து காக்கலாம். அத்துடன் கொலெஸ்ட்ரோல் உடலில் சேர்வதை கேரட் தடுக்கிறது. எனவே தினமும் காலையில் ஒரு கேரட்டை உண்டால் ஆண்களுக்கு எந்தவித பிரச்சினைகளும் வராது.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவெந்தயத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!
Next articleஇலங்கை மாணவனின் அபார கண்டுபிடிப்பு!