ஆட்டங்காணும் ஹோட்டல்கள்! மஹிந்தவின் வருகையால்!

0

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக பல துறைகளிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்து வரும் இரு வாரங்களுக்கு அரசாங்கத்தினால் ஏற்படு செய்யப்பட்ட பல்வேறு நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பலர் பாதிப்படைந்துள்ளனர்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி வரவு செலவுத் திட்டம் சமர்பிப்பதற்கான ஆயத்தங்கள், முன்னாள் நிதியமைச்சரினால் மேற்கொள்ளப்பட்டன. அது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதற்கு கொழும்பில் சில பிரதான தரப்பு ஹோட்டல்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

எனினும் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலையில் ஜனாதிபதியினால் அடுத்த மாதம் 16ஆம் திகதி வரை நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளும் தாமதமாகும் என்பதனால் மாநாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பல அரச நிகழ்வுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலைமையினுள் கொழும்பின் பிரதான ஹோட்டல்கள் பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையை விட்டு தப்பியோடிய ஆபத்தான நபர்கள்!
Next articleஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை! நாடாளுமன்றத்தை உடன் கூட்டுங்கள்! இல்லையேல் விளைவுகள் விபரீதமாகும்!