ஆடை படத்தில் கங்கனா ரனாவத் !

0
611

நடிகை அமலா பால் நடிப்பில் வெளியாகி மிக பரபரப்பாக பேசப்பட்ட படம் ஆடை. அதில் அவர் ஆடை இல்லாமல் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்வது போல கதை இருக்கும். அமலா பால் நிர்வாணமாக அதில் நடித்திருந்த நிலையில், படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இந்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர் என்கிற எதிர்பார்ப்பு வெளியாகியுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் தான் இந்த படத்தில் அமலா பால் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என செய்தி பரவி வருகிறது.

பிரபல தயாரிப்பாளர் முகேஷ் பட் தான் இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளார். ஆடை படத்தை இயக்கிய ரத்னகுமார் தான் ஹிந்தி ரீமேக்கையும் இயக்குகிறார்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 28.10.2019 !திங்கட்கிழமை
Next articleசொக்லேட் ஒரு லட்சம் ரூபாய்!