ஆடி மாதத்தில் அதிஷ்டக் காற்று அடிக்கப்போவது உங்கள் ராசிக்கா? விருச்சிகம் முதல் மீனம் வரை!

0
2255

விருச்சிகம்
உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கேற்ப உழைப்பை மட்டுமே நம்பி சாதனைகளை புரிய விருப்பப்படும் விருச்சிக ராசி அன்பர்களே

இந்த மாதம் வாழ்க்கை வளம் முன்னேறும். அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வயிறு சம்மந்தமான பிரச்சனையுள்ளவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். உணவுக்கட்டுப்பாடு அவசியம். கைவிட்டுப்போன பொருட்கள் மீண்டும் உங்களை வந்தடையும். வழக்கு வியாஜ்ஜியங்களில் இருந்து வந்த சங்கடங்கள் விலகும்.

குடும்பத்தில் இருந்து வந்த சின்னச் சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர். தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். சுபச் செலவுகள் நிகழும். சாகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். முன் யோசனையுடன் திட்டமிடல் குடும்பத்தில் சிக்கலை தீர்க்கும்.

உத்தியோகஸ்தர்கள் விரும்பிய பதவி கிடைக்கும். எதிரிகளின் இன்னல் இருக்கும் இடம் தெரியாமல் போகும். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இடமாற்றம் கிடைக்கும். எதிர்காலத்திற்குத் தேவையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள்.தொழிலதிபர்கள் வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்துச் செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். ஊழியர்களை உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் உழைக்க வைத்து அவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

பெண்கள் அக்கம், பக்கத்தாரிடையே ஒற்றுமை பலப்படும். பொருளாதார வலிமை கூடும். அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்புகளும் ஏற்படலாம். நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கை தேவை. சீரான வாழ்க்கை அமைய வில்லை என்று கவலைப்பட்டு கொண்டிருந்த பெண்களுக்கு சந்தோஷமான வாழ்க்கை நல்ல படியாக அமையும்.

கலைஞர்கள் கலைத்துறையில் உள்ளவர்களுக்குசீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். எதிலும் சாதிக்க வேண்டி கடினமான உழைப்புக்கு ஆளாவீர்கள். மூத்த கலைஞர்கள் உங்களிடம் உள்ள திறமைகளை புரிந்து கொள்வார்கள். நன்மைகள் சிறிது தாமதத்திற்கு பின்னரே கிடைக்கும்.

அரசியல்வாதிகள் சமூக சேவையில் உள்ளவர்களுக்கு மிகுந்த உற்சாகமாக இருக்கும் காலகட்டம். பொது இடத்தில் பேசும் போது கவனம் தேவை. மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். உங்களின் நலம் விரும்பி ஒருவர் உங்களுக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக விளங்குவார்.மாணவர்கள் மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். சிலருக்கு மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும், வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நண்பர்களிடத்தில் பழகும் போது சில பழிச்சொல்லுக்கு ஆளாக நேரலாம் கவனம் தேவை.

பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். அரளி மாலை சாற்றவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்

துலாம்
சமம் தராசு என்பதற்கேற்ப அனைத்து விதமான மக்களையும் ஒரே நியாயத் தராசில் வைத்துப் பார்க்கும் துலாம் ராசி அன்பர்களே,

இந்த மாதம் இப்போது இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு இன்னல்களுக்கிடையில் நன்மைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாடகளாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடியும் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தவறான வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். எதிலும் சற்று கவனம் தேவை.குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தள்ளிப் போகலாம். எனினும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்வது நல்லது. தம்பதிகளிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள் ஒவ்வொன்றாக மாறும். பொருளாதார வளம் சிறப்படையும். வழக்கு அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சனை முடியும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். உங்கள் கௌரவம் உயரும். முயற்சிகளில் பின் தங்கிய நிலை வேண்டாம். மேலதிகாரிகளின் ஒத்துழைப்போடு குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிப்பீர்கள்.தொழிலதிபர்கள் வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள், ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கௌரவம் உயரும். சிலர் தொழில் நிமித்தமாக நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.

பெண்கள் பெண்களுக்கு சிறப்பான பலன்கள் வந்து சேரும். சொத்து தொடர்பான பிரச்சனைகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். அக்கம் பக்கத்தினரிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மறைந்து அவர்கள் இல்ல விசேஷங்களுக்கு உங்களை முன் நிறுத்துவார்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகலாம். உடன் பிறந்தோர் உற்ற துணையாக இருப்பார்கள்.கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவீர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். கலைத்துறையில் சீரான நிலைமை இருக்கும். நல்லவிதமான ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். சுலபமான விசயங்கள் அனைத்தும் சிறிது முயற்சிக்குப் பின்னரே கிட்டும். முகத்திற்கு முன் விமர்சிப்பவர்கள் உங்களை பின்னால் பாராடுவார்கள்.

அரசியல்வாதிகள் சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். கௌரவம் உயரும். அதிக பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பகுதி மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் முன்னேற்றப் பாதையில் இருந்து வந்த தடைகளை உடனிருப்போர் அதிக அக்கறையுடன் கண்ணும் கருத்துமாக செயல்படுத்துவர்.

மாணவர்கள் மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துப்படிப்பது அவசியமாகும். உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும். ஆசிரியர்கள் உங்களை சிறந்த மாணவர்களுடன் ஒப்பிட்டுப் பேசும் போது உங்களுக்கு மனநிறைவு உண்டாகும். பாராட்டு மழையில் நனைவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவக்ரஹ சன்னதியை ஒன்பது முறை வலம் சென்று வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி

தனுசு
வில்லுக்கு சீரிய சிந்தனை என்பதற்கேற்ப எதிலும் நேர்மையுடனும் நேர்மறையான சிந்தனைகளுடனும் இருந்து காரியத்தை சாதிக்கும் தனுசு ராசி அன்பர்களே

இந்த மாதம் உங்கள் திறமையில் இருந்து வந்த பிந்தங்கிய நிலை இனி மாறும். முயற்சிகளில் தடைகள் வந்தாலும், இறைவனின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள்.

குடும்பத்தில் வீட்டில் சின்னச்சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். சிலருக்கு விரும்பத்தாகாத செய்தி ஒன்று தூரத்துலிருந்து வரலாம். கணவன், மனைவியரிடையே அன்பு மேலோங்கும்.

உத்தியோகஸ்தர்கள் உடன் வேலை செய்வோரின் ஆதரவால் பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள். தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு சிறு வாக்கு வாதங்கள் வரலாம். காரிய அனுகூலம் கிட்டும். பணம் சம்மந்தப்பட்ட இடங்களில் நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். புதிய கடன்கள் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள்.

தொழிலதிபர்கள் தொழிலில் தேவையில்லாத பண விரயம் ஏற்படலாம். கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். உங்கள் கூட்டாளிகளுடன் கருத்து மோதல்கள் வரலாம். சிலருக்கு வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் மிக அவசியம். முற்போக்கு சிந்தனை உங்களுக்கு மேலோங்கும்.

பெண்கள் அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அதிக வேலைப்பளு உண்டாகலாம். எந்த வேலையிலும் கவனச் சிதறல் ஏற்படாமல் கவனமாக இருங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும். நீங்கள் நம்பிப் பழகும் ஒருவரால் நீங்கள் ஏமாற்றப் படுவதை உங்கள் மனம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் கவனமாக இருங்கள்.

கலைஞர்கள் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உன்னதமான காலகட்டமிது. கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். அதனால் சிக்கல்கள் தீரும். பணிச்சுமையின் காரணமாக அசதி ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். பிற மதத்தினரால் புதிய அனுகூலம் உண்டாகும்.

குறிப்பாக நினைத்த காரியத்தில் வெற்றி.அரசியல்வாதிகள் தீவிர முயற்சிக்குப் பின்னரே சிலருக்கு நடக்க வேண்டிய காரியங்கள் நடைபெறும். சில கட்டங்களில் நன்மை, தீமை கலந்தே நடைபெற்றாலும் இறுதியில் நன்மையே உண்டாகும். அரசு விவகாரங்களில் கையெழுத்திடும் போதும், ஜாமீன் இடும் போதும் ஒருமுறைக்கு பல்முறையேனும் யோசித்து செயல்படுவது நன்மையைத் தரும்.

மாணவர்கள் படிப்பில் நிதானமும் கவனமும் தேவை. சுற்றுலாச் செல்ல நேர்ந்தால் அனைவருடன் ஒற்றுமையாக பழகி பக்குவமாக நடந்து கொள்ளுதல் அவசியம். கேட்ட உதவிகள் தாராளமாக கிடைக்கும்.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் உங்களுக்குப் பிடித்தமான குரு கோவிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

மகரம்
மகரம் பணி என்பதற்கேற்ப எந்த வேலையைக் கொடுத்தாலும் சோம்பலில்லாமல் செய்யத் துடிக்கும் மகர ராசி அன்பர்களே

இந்த மாதம் சில நன்மைகள் தரக்கூடிய வகையில் இருக்கும் கால கட்டம். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் நடந்து கொண்டால் பொருளாதார வகையிலும் வாழ்க்கைத் தரத்திலும் வளர்ச்சி உண்டாகும். ஏராளமானோர் உங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள். சிக்கல்கள் வராது.குடும்பத்தில் எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சி செய்யுங்கள். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான கால கட்டமாகும். மேலதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சம்பள உயர்வும், பதவி உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம்.

தொழிலதிபர்கள் உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய கால கட்டத்தில் நன்மைகள் நடக்கும். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். புதிய தொழில் ஆரம்பிக்கக்கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். நல்ல லாபம் கிடைக்கும்.

பெண்கள் நிறைய விசயங்களில் காரியத்தாமதம் ஏற்படலாம். உத்தியோகம் பார்க்கும் பெண்கள் வேலையில் கவனச் சிதறல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். உங்கள் கௌரவம் நிலை நாட்டப்படும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். எந்த விசயத்திலும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.

கலைஞர்கள் நல்ல பெருமையும், புகழும் கிடைக்கப் பெறுவர். கடினமாக உழைக்க வேண்டி வரும். மிகவும் பணிச்சுமையால் நேரத்திற்கு உணவருந்த முடியாமல் வாயுத் தொல்லை வயிற்று உபாதைகள் ஏற்பட்டு மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு நல்குவர்.

அரசியல்வாதிகள் அரசு சார்ந்த விசயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். மக்கள் தொடர்பான பணிகளில் பணியாற்றும் போது கவனம் தேவை. நல்ல செல்வாக்கு கௌரவம் கிடைக்கும். வேலைப்பளு காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிய நேரலாம். நன்கு பணியாற்றி நற்பெயரை எடுப்பீர்கள்.மாணவர்கள் மாணவிகள் நல்ல சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். நீண்ட நாட்களாக காணாமல் போன பொருள் ஒன்று கிடைக்கும். நண்பர்களுடன் பழகும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வாருங்கள். நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி

கும்பம்
கும்பம் பந்தம் என்பதற்கேற்ப சொந்த பந்தங்களின் மேல் அதீத பாசம் வைத்திருக்கும் கும்ப ராசி அன்பர்களே,

இந்த மாதம் போதிய அளவில் பணம் வந்து தேவையை பூர்த்தி பண்ணும் கால கட்டம். தீவிர முயற்சிகலளின் பேரில் சில சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். தெய்வ அனுகூலத்தால் சிக்கலில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் ஏற்படும். தூரத்திலிருந்து வரும் செய்திகள் உங்களுக்கு அனுகூலம் இல்லாமல் இருக்கலாம். கேளிக்கை வினோதங்களில் அதிக ஈடுபட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள நேரிடலாம்.

குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். கணவன், மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் சின்னச் சின்ன வாக்கு வாதங்கள் தலை தூக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். தடைகள் வந்தாலும் சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிபவரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். வேலைப் பளு அதிகமாக இருக்கும். வெளியூர் பயணத்தின் மூலம் ஏற்படும் நற்பெயரை கெடுத்துக் கொள்ளாமல் நற்பலன்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

தொழிலதிபர்கள் தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். எதிலும் புதிய முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இல்லையெனில் அவர்களால் தொந்தரவுகள் வரலாம். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். தங்களின் தீவிர முயற்சிக்கு பலனை எதிர்ப்பார்க்கலாம். பெண்கள் பெண்களுக்கு மகிழ்ச்சியின் மிகுதியால் அலட்சியமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. நாவடக்கம் மிகத் தேவை. உடல் நலத்தில் தீவிர அக்கறையும், கண்காணிப்பும் அவசியம். பிள்ளைகளால் நற்செய்தி, முன்னேற்றம் உண்டு. அதிகமாக யாரிடனும் கலந்துரையாடுவதைத் தவிர்க்கவும். வேலக்குச் செல்லும் பெண்களுக்கு அவ்வப்போது பிரச்சனைகள் வந்து மறையும்.

கலைஞர்கள் கலைத் துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். உடனிருப்போரிடம் எந்த விதமான ரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மூத்த கலைஞர்கள் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மதிப்பாக நடத்துவார்கள். அரசியல்வாதிகள் அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். ஆனாலும் மிகக் குறைந்த அளவே பலனை எதிர்பார்க்க முடியும். சிலரை உங்களுக்கு புரிந்து கொள்ள முடியாது. அவர்களின் செயல்களால் உங்களுக்கு மன உளைச்சல் வரலாம். மனநிம்மதி கிடைப்பதற்கு தியானம் செய்யுங்கள். அரசு அலுவலக விசயங்கள் அனைத்தும் திட்டமிட்ட படி நடக்கும்.

மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்துப் படிப்பது நல்லது. சமூக சேவைகள் செய்ய ஆசிரியர்கள் பணிப்பார்கள். நண்பர்களுக்கு பிரதிபலன் பாராது உதவி புரிவீர்கள். நண்பர்கள் வட்டாரத்தில் நற்பெயரும் உண்டு. பலரது பாராட்டுகள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனிஹோரையில் அருகிலிருக்கும் சிவன் கோவிலிக்கு சென்று வாருங்கள். (காலை 6மணி முதல் 7 மணி வரை)

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி, சனி

மீனம்
மீனம் ஓட்டம் என்பதற்கேற்ப வாழ்க்கையில் கடுமையான உழைப்பிற்கு எப்போதுமே தயங்காத முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக செயல்படும் மீன ராசி அன்பர்களே,

இந்த மாதம் எந்தத் துறையிலும் முத்திரையைப் புதிய வழியில் பதிப்பீர்கள். தெய்வ அனுகூலத்தால் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். அதீத உழைப்பின் மூலம் வெற்றிகள் கிடைக்கும். வழக்கு, வியாஜ்ஜியங்கள் சாதகமாக இருக்கும். அதனால் சிலருக்கு கடன்கள் வரலாம். சொத்து விசயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும்.குடும்பத்தில் உறவினர்கள் முறையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நிகழும். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும். பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிப்பதையும் காண்பீர்கள். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு, போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். அறிவைப் பயன்படுத்தி புதிய வேலைகள் கிடைக்கப் பெறலாம். உத்தியோகம் சம்மந்தமாக வெளியூர் செல்ல நேரலாம்.

தொழிலதிபர்கள் வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சலும், கவனச் சிதற்லும் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். இருப்பதை சிறப்பாக நடத்துவதற்கு முயற்சி செய்யவும்.

பெண்கள் பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர், மற்றும் அண்டை அயலாரின் அன்பும், பாசமும் கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் ஆகையால் கடினமான வேலைகளிலும் கூட உற்சாகமாக காணப்படுவீர்கள். எல்லோரிடமும் அன்பாக பழகி, சுறுசுறுப்பாக நடந்து அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.

கலைஞர்கள் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெற்று பொருளாதார உயர்வும், புகழும், பாராட்டும் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு வேறு மொழிப்படங்களிலும், பிரகாசிக்கக் கூடிய கால கட்டம். உடல் நலம் சீராக இருக்கும். சிலருக்கு அலைச்சல் மிகுதியால் நேரத்திற்கு உணவு சாப்பிடமுடியாமல் வயிற்று உபாதைகள் ஏற்படலாம்.

அரசியல்வாதிகள் அரசியல்வாதிகளுக்கு முற்பகுதி நன்றாகவே இருக்கும். எதிர்பார்த்த பதவியை அடையலாம். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப் பெற்று மன நிம்மதியை அடைவீர்கள். சிலருக்கு பித்தம், சூடு போன்ற உடல் உபாதகள் வந்து போகும். தக்க நேரத்தில் அதற்குள்ள மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் பெற்று சிறந்த பேரை எடுக்க முடியும். நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். தந்தை, தாயிடம் அன்பும், பாசமும் கிடைக்கப் பெறுவீர்கள். நல்லதே நடக்கும்.

பரிகாரம்: அருகிலிருக்கும் கோவிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். முடிந்தால் எண்ணெய் வாங்கிக் கோவிலுக்கு கொடுக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: