ஆச்சரியம்! 521 மில்லியன் டொலர் லாட்டரியில் பரிசு விழுந்தும் அதை வாங்காமல் இருக்கும் நபர்!

0
614

521 மில்லியன் டொலர் லாட்டரியில் பரிசு விழுந்தும் அதை இன்னும் அந்த நபர் வந்து வாங்காமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 521 மில்லியன் டொலர் மெகா மில்லியன் ஜாக்பாட்டிற்கான டிக்கெட் விற்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த லாட்டரி டிக்கெட்டிற்கான குலுக்கல் கடந்த வெள்ளிக் கிழமை நடந்துள்ளது. அப்போது 11, 28, 31, 46, மற்றும் 59 (Mega Ball of 1) என்ற லாட்டரி எண்ணிற்கு இந்த பரிசு விழுந்துள்ளது.

ஆனால் குலுக்கல் நடந்து இரண்டு தினங்கள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் அந்த லாட்டரி டிக்கெட் வைத்திருப்பவர் வந்து வாங்கவில்லை.

அந்த டிக்கெட் New Jersey மாகாணத்தின் Riverdale பகுதியில் உள்ள Lukoil gas station-ல் விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த எண்களை கொண்ட லாட்டரி டிக்கெட் வைத்திருப்பவர் உடனடியாக வந்து இந்த பரிசை பெற்றுச் செல்லும் படி கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்த நபர் கடந்த ஜனவரி மாதம் 5-ஆம் திகதி நடந்த குலுக்கலில் 451 மில்லியன் டொலரை பரிசாக வென்றிருந்தார்.

மேலும் மெகா மில்லியனுக்கான லாட்டரி குலுக்கலில் கடந்த 2012-ஆம் ஆண்டு 656 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றதே தற்போது வரை சாதனையாக உள்ளது என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: