ஆசிரியரே வன்புணர்வு செய்த கொடுமை: நான்காம் வகுப்பு மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி!

0

கொல்கத்தாவில் நான்காம் வகுப்பு மாணவியர் இருவரை அவரது வகுப்பு ஆசிரியர் ஒருவரே பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.

பள்ளி அறையில் வகுப்புகள் முடிந்தவுடன் இந்தக் கொடுமையை இவர் தொடர்ந்து நான்கு நாட்களாக செய்து வந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக அந்த சிறுமிகள் இருவரும் பள்ளி செல்ல மறுத்திருக்கின்றனர். காரணம் என்னவென்று தெரியாத நிலையில் இதில் ஒரு சிறுமி மட்டும் நடந்ததை கூறி அழுதிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அந்த மாணவிகளை அவர் அடித்து துன்புறுத்தவும் செய்திருக்கிறார். பள்ளி முடிந்தவுடன் தொடர்ந்து நான்கு நாட்களாக நடந்த இந்த வன்புணர்வில் ஒரு சிறுமி மட்டும் உடலளவில் அதிகமாக பாதிப்பு அடைந்திருக்கிறார்.

இப்போது சிறுமிகள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த உடன் பெற்றோர்கள் அனவைரும் சம்பந்தப்பட்ட பள்ளியின் முன் கூடி போராட்டம் நடத்தினர். நேற்று இரவிலிருந்து இன்று காலை வரை போராட்டம் தொடர்ந்தது.

12 வயதுக்கும் கீழ் உள்ள சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை என்று சட்டம் இயற்றப்பட்டிருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆபாச படத்திற்கு அடிமை: பெற்ற தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த மனித மிருகம்!
Next articleவேறு மாதிரி போட சொன்னேன்…. அதனால் தான் வெற்றி சாத்தியமானது: டோனி