அலுவலகத்தில் பெண்கள் ஆண்களிடம் இப்படி தான் நடந்து கொள்ள வேண்டுமாம். ஏன் தெரியுமா?

0

பொதுவாக வேலை செய்யும் பெண்களுக்கு அலுவலகத்தில் ஆண்களிடம் இருந்து பல்வேறுவிதமான பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கமே. அத்தகைய பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கு பெண்கள் எவ்வாற நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி இங்க நோக்குவோம்.

இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாத ஒரு விடயமாக இருப்பதுடன், அத்தகைய ஒரு சூழலில் அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஆண்களிடம் இருந்து பிரச்சினைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எப்பது பற்றிய தெளிவு எமக்கு அவசியம். இதோ உங்களுக்கு பயன்படக் கூடிய அத்தகைய சில பயனுள்ள ஆலோசனைகள் கீழே!

ஆள் பாதி ஆடை பாதி எனனும் எம் முன்னோரின் கூற்றுக்கு ஏற்ப நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது அவசியம். அதாவது, மாடர்ன் ஆக உடுத்தினாலும் கூட, நேர்த்தியாக உடுத்துவது உங்களை பாதுகாக்கும்.

நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர கூட வேலை செய்தாலும் பர்சனல் தொலைபேசி இலக்கங்களை யாருக்கும் கொடுக்காதீர்கள்.

பொதுவாக ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறான ஒரு விடயம் அல்ல. எனினும், எடுத்ததற்கெல்லாம் கைகொடுப்பது மற்றும் தொட்டுப் பேசுவது போன்றன உங்களை சிக்கலில் மாட்டி விடும்.

உயர் அதிகாரிகளால் தொல்லைகள் ஏற்படும் போது அதனை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையாளாது பிரச்சினைகள் மீண்டும் வராத வகையில் மிகவும் கவனமாகவும் அவதானமாகவும் கையாளுங்கள்.

முக்கியமாக கூட வேலை பார்க்கும் சக ஆண்களிடம் எம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடும் போதும், எமது சொந்த குடும்ப விஷயங்களுக்கு கூட வேலை பார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்கும் போது அவர்கள் எம்மிடம் அதிகளவில் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்ளப் பார்ப்பார்கள்!

நீங்கள் உங்கள் உயர் அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், அவர்கள் உங்கள் வேலைகளில் குறை கண்டுபிடிப்பதனூடாக தமது பழிவாங்கும் படலத்தினை தொடங்குவர். எனவே, முடிந்தவரை வேலைகளில் தவறு செய்வதனைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் புன்னகையானது நட்பு ரீதியான புன்னகையாக அமையலாமே தவிர, காரணமில்லாமல் எடுத்ததற்கெல்லாம் உடன் பணிபுரியும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள் அதாவது பல்லிளிக்க வேண்டாம். முக்கியமாக தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் அடிக்கடி பெரிய சத்தம் போட்டு சிரிக்காதீர்கள்.

அழும் பெண்களை ஆண்கள் சுலபமாக திசை திருப்பிவிட முடிவதனால், நீங்கள் எதற்காகவும், எந்த பிரச்சினைகளுக்காகவும் ஒருபோதும் வெளிப்படையாக அழாதீர்கள்.

நீங்கள் யாரிடம் பேசினாலும் அவர்களின் கண்களை மட்டும் பார்த்துப் பேசுவதுடன், அவர்களையும் உங்களின் கண்களை; மட்டும் பார்த்து பேச அனுமதியுங்கள்.

முக்கியமாக நீங்கள் வேலை செய்யும் ஆபிஸில் ஒரு ஆணுடன் தாழ்வான ரகசியக் குரலில் பேசும் போது, அது கேட்பவர்களுக்கும், பார்ப்பவர்களுக்கும் உங்களைப் பற்றிய ஒரு தப்பான அபிப்ராயத்தை உருவாக்கும். எனவே, இதனை தவிர்த்து வருவது நல்லது.

ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு மற்றும் மனமெச்சூரிட்டி என்பனவற்றைப் பொறுத்து ஆணிடம் பெண்கள் பழக முடியும் எனினும், பொதுவான ஆண்கள் சமூகமானது பெண்ணை வித்தியாசமான அங்க அவயங்கள் கொண்ட ஒரு சதைப் பிண்டமாகவே பார்க்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் ஒரு ஆண் தன்னுடன் வேலை செய்யும் ஏனைய சக பெண்களை தங்களுடன் வேலை செய்யும் மற்ற ஆண் பணியாளர்களை போல எப்போது நினைக்க தொடங்குகின்றானோ அப்போதுதான் அவனோடு பணிபுரியும் இடங்களில் பெண்கள் பாதுகாப்பின்மை என்ற அச்சத்தில் இருந்து விடுபடுவர்.

எந்தவொரு ஆணாவது உங்களிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்டால், முதலில் நீங்களே இரண்டொரு முறை பக்குவமாக எடுத்துச் சொல்லி கண்டித்துப் பாருங்கள். அவர் அதனை கேட்காமல் மேலும தொடருவாராயின்; உங்கள் மேலதிகாரியிடம் இது தொடர்பாக முறையிடுங்கள்.

ஒரு ஆணிடம் கை குலுக்குதல், அவருடன் சேர்ந்து தேநீர் பருகுதல் மற்றும் இரவு நேரத்தில் அவருடன் வாகனத்தில் பயணித்தல் போன்ற விடயங்கள் நம் அக்கம்பக்கத்தினரால் விரும்பி கூர்மையாக கண்காணிக்கப்படுகின்ற விஷயங்கள் என்பதை கட்டாயம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்!

நீங்கள் வேலை செய்யும் அலுவலகம் என்பது நீங்கள் பணிபுரிய மட்டுமே என்பதனையும் எனைய உங்களது தனிபட்ட விருப்பங்கள் மற்றும் குடும்ப பிரச்சினைகளுக்கு ஏற்ற இடம் அல்ல என்பதனையும் நீங்கள் மறக்க வேண்டாம்.

ஒருபோதும் உங்களின் பொருளாதார இயலாமை நிலைமையினை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள். அவ்வாறு கூறும் போது உங்களுக்கு உதவுவது போல அவர்களின் கெட்ட எண்ணங்களை சாதித்துக் கொள்வர்.

பொதுவாக ஒரு ஆணால் உங்கள் ஆடை அல்லது உங்களுக்கு உள்ள ஒரு திறமை பற்றி பாராட்டப்படும் போது, தேவையில்லாமல் வெட்கப்படுவதைத் தவிர்த்து “நன்றி” என்று மட்டும் சொல்லுங்கள்கள்.

அவர்களுட் இணைந்து அரட்டை இடிக்கும் போது, ஜோக்ஸ் என்ற பெயரில் தேவையற்ற பேச்சுகள் பேசப்படுவதனை அனுமதிக்காதீர்கள்.

மீண்டும் சொல்கிறேன். உடன் பணிபுரியும் ஆண்களால் விமர்சிக்கப்படும் அளவிற்கு உடை அணியாதீர்கள்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்களுடைய இளமையான தோற்றத்தை மேலும் அதிகரிக்க இவற்றை செய்யுங்கள்!
Next articleஇப்படி இருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு பிடிக்கிறதாம்! நீங்க எப்படி பாய்ஸ்!இப்படி இருந்தால் மட்டுமே பெண்களை கவர முடியும் ஞாபகம் வச்சுக்கோங்க!