இரவு படுக்கும் போது மின்விசிறி போட்டுவிட்டு படுப்பவர்களா நீங்கள்? அப்போ இதை தெரிந்து வைத்திருங்கள்!

0
6604

உச்சி வெயிலில் உடல் வியர்த்து வந்து மின்விசிறிக்கு அருகில் அமரும்போது உடலைக் குளிரூட்டும் அக்கருவிக்கு ஆளையே கொல்லும் மறுபக்கம் இருப்பதை நீங்கள் அறிவீர்களா? இந்த மின்விசிறி பயம் கொரியர்களை அதிகமாகவே குலை நடுங்க வைத்திருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

மருத்துவர்களின் பல்வேறு கருத்து:

சியோலில் உள்ள செவரன்ஸ் மருத்துவமனையின் டாக்டர் ஜான் லிண்டோன் “அறிவியல் பூர்வமாகவும் மின்விசிறி மரணங்கள் மீது சிறிய அளவில் ஆதரவு இருக்கின்றது. ஆனால் கதவு ஜன்னல் கூரை என எல்லாம் மூடப்பட்ட நிலையில், ஓடும் மின்விசிறியால் மட்டுமே ஒருவர் இறக்க முடியும்” என்று ஜூன்காங் நாளிதளில் 2004 இல் கூறியுள்ள அதேவேளை சியோல் நேஷனல் பல்கலைக்கழகத்தின் மருத்துவமனை பேராசிரியர் யூ தாய் வூ “மின்விசிறி ஓடுவதையும் இறந்து கிடப்பதையும் சேர்த்துப் பார்ப்பதால் மக்கள் மின்விசிறி மரணங்களை நம்புகின்றனர். ஆனால் ஆரோக்கியமான மனிதர்களை மின்விசிறி ஒன்றும் செய்வதில்லை அவர்கள் நன்றாக தூங்குவார்கள்’ என்று 2007 ஆம் ஆண்டு கூறியுள்ளார்.

கனேடிய நிபுணர் விளக்கம்:

கனேடிய நிபுணரான கார்ட் ஜீஸ்ப்ரெசிட் “மின்விசிறியால் இறப்பவர்கள் பெரும்பாலும் தாழ்வெப்பநிலை (ஹைபோதெர்மியா) தாங்க முடியாதவர்களாக இருக்கலாம். ஏனெனில் மின்விசிறி இரவில் நீண்ட நேரம் ஓடுவதனால் அதன் வெப்பநிலை 10 டிகிரி குறைந்து 28 க்கு கீழே போகும்போது அவர்களுடைய முகத்தைச்சுற்றி ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது அதனால் மூச்சுத்திணறி இறக்கலாம் என்றும் அதனையே காரணமாகக் கொண்டு பயனுள்ள ஒரு அறிவியல் கருவிமீது கொலைப்பழி சுமத்துவது தவறு எனவும் உதாரணமாக டிவியின் அருகில் இருந்து பார்த்தால் கண்களை பாதிக்கிறது. அதற்காக டிவி கண்பார்வையை பறிக்கிறது என்று ஒதுக்கிவிட முடியுமா? என்று எதிர்கேள்வி எழுப்பி மின்விசிறி மரணங்கள் பற்றி ‘ஜூன்கான்’ நாளிதழுக்கு கூறியுள்ளார்.

அறிவியல் கூறுவதென்ன?

கொரியாவின் நகர்ப்புற மக்கள் மின்விசிறி மரணங்களை உறுதியாக நம்புகின்ற அவேளை 35 ஆண்டுகளாக அங்கு இடம்பெற்று வந்துள்ள பல்வேறுபட்ட மரண சம்பவங்களின் அடிப்படையில் ஊடகங்களும் மக்கள் கருத்தை பிரதிபலிக்க துவங்கியுள்ளன. எனினும் அறிவியலானது மின்விசிறி மரணங்களிற்கு வாய்ப்பில்லை என்றே கூறுகின்றன.

மேலும் மின்விசிறி ஓடும்போது வெப்பநிலை குறைகிறது என்று சொல்லப்பட்டாலும் மின்விசிறி ஓடுவதால் அதன் மோட்டார் சூடாகிறதனால் அந்த வெப்பம் அறையின் காற்றலைகளில் கடத்தப்படுவதனால் சமயங்களில் கொஞ்சம் அனலாகவும் வீசுவதுடன் இக்காற்றானது இயற்கையாக வீசும் காற்றினை விட இனிமை குறைந்ததாகவே இருக்கும். வெளிக்காற்று வராமல் முற்றிலும் அடைக்கப்பட்ட அறையில் மின்விசிறி ஓடினாலும் அந்த அறையின் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்து ஆக்ஸிஜன் குறையவே செய்யும்.

அவ்வாறாக, மின்விசிறியின் வேகமான காற்றலை திடீரென குறையும் வெப்பநிலை, அறை காற்றில் மிகும் கார்பன் டை ஆக்ஸைடு மூலக்கூறுகள் என்பன ஆஸ்துமா போன்ற நோய்களின் தாக்கத்திற்க உட்பட்டவர்களிற்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்த முடியும்.

மூடநம்பிக்கையா? நுட்பமான அறிவியலா?

ஆரோக்கியத்தில் மனிதர்களுக்குள் ஆயிரக்கணக்கான நிலைகள் உண்டு. அந்நிலைகள் பற்றி சற்று விரிவாக நோக்கின் சிலரால் உச்சிவெயிலில் உழைக்க முடிந்த அதேவேளை உலா செல்லும் போதே பலர் மூர்ச்சையாகி விழுந்து இறந்துள்ளனர். மேலும் பொதுவாக அதிர்ச்சி சம்பவங்களில் பைத்தியம் பிடிக்கின்ற அதேவேளை அதே அதிர்ச்சியை தாங்கிக்கொண்டு அதற்கு வைத்தியமான பலரும் இன்றும் எம்மிடையே வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

இவ்வாறாக கொரியா மக்களிடயே அதிகளவான மின்விசிறி மரணங்கள் இடம்பெற்றிருப்பதனால் அந்த இனத்தவர்களின் உடல் சுபாவத்தில் மின்விசிறி பயன்படுத்துவதில் ஒவ்வாமை பொதுவாகவே காணப்படுவதுடன் அது பல்வீனமானவர்களிடம் மிகுந்து வெளிப்படுவதால் மரணம் நேர்கிறது. இவ்வாறாக மின்விசிறி ஆளைக் கொல்லும் அளவுக்கு தீங்கானது என்பதை மேலோட்டமாக கேட்கும் போது ஒரு மூடநம்பிக்கை போல தோன்றினாலும் அதில் ஒரு நுட்பமான அறிவியல் பார்வை உள்ளது என்பதும் உண்மைதான்.

நுட்பமானவையே தீங்கை தெரியப்படுத்தும்:

(இயற்கையாக) நாம் எவ்வளவு வேகமாக ஓடினாலும் காற்று நம் கண்களை உறுத்துவதில்லை என்பதுடன் 80 கி.மீ. (செயற்கையான) வேகத்தில் பைக்கிள் செல்லும்போது காற்று விழித்திரையை கிழிப்பதுபோல உறுத்தும். எமது கண்கள் நுட்பமான உறுப்பாக காணப்படுவதனால் இதை நாம் கைகால்களில் உணர்வதைவிட கண்களில்தான் வலியோடு உணர்கின்றதுடன் எமது கண்களைப் பாதுகாக்க கண்ணாடிகளும் அணிகின்றோம். அதுபோலவே மின்விசிறிகளின் தீங்கிற்கு கொரியர்கள் நுட்பமானவர்களாக இருக்கிறார்கள் என்பதே இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: