கற்றுக்கொள்ளப் பழகுவோம் எங்கள் பாட்டன், பூட்டன் இதுபோல் இன்னும் பல விடயங்களை ஒளித்து வைத்திருப்பான்.

0
1178

இதுவரை நீங்கள் தெரிந்திராத அறிவியல் தகவல்!! தெரிந்து கொள்வோம்.

விவசாயி ஒருவர் குறிப்பிட்ட இடம் ஒன்றினை வாங்குவதற்கு முன்னர், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் அங்கு தங்குவார். என்ன புரியலயா?

வழக்கம்போல் சேவல் அதிகாலையில் கூவினால் அந்த மண்ணில் ‘உசுரு’ இருக்கு என்று அர்த்தமாம்.

தவறி கூவாது விட்டால் மண்ணில் சத்து எதுவுமே இல்லை என்று அர்த்தமாம்…

அதாவது சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அவர் அந்த இடத்தை வாங்குவர்.. இதிலுள்ள முக்கியமான உண்மை யாதெனில்; சேவல் மண்ணைக் கீறும் போது அதனுள் உள்ள புழுக்களை சாப்பிட்டு அடுத்த நாள் தெம்பாகக் கூவும்.

தோண்டும் போது புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் அது வெளிப்படையாக தெரிந்துவிடும். இங்கு புழு அதிகம் இருக்கும் மண்ணே விவசாயத்திற்கு மிகவும் பொருத்தமானது ஆகும்.

விவசாய கிணறு வெட்டுவதற்கு திட்டமிட்டிருக்கும்; நிலப் பகுதி ஒன்றினை நான்கு பக்கமும் நன்கு அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விட்டு, அப்பசுக்களை நன்கு கவனித்தால் அவை பொதுவாக மேய்ந்த பின்னர் குளிர்ச்சியான இடத்தில் படுத்து நன்கு அசை போடும்.

அப்படி அவை படுக்கும் இடங்களை 4 அல்லது 5 நாட்கள் தொடர்ந்து கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அத்தகைய இடத்தில் தோண்டினால் என்றுமே வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்…

அறிவியல் நன்கு வளர்ந்து விட்டது. எங்களால் எதனையும் சாதிக்க முடியும். என்று கூறி மக்களை நோயாளியாக மாற்றி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உண்மையான அறிவியல் வளர்ச்சியா? ஒரு கணம் சிந்திப்போம்

ஆனால், இயற்கையை கடவுளாக நினைத்து வணங்கி இயற்கையோடு இயற்கையாக இணைந்து வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.

கற்றுக்கொள்ளப் பழகுவோம் எங்கள் பாட்டன், பூட்டன் இதுபோல் இன்னும் பல விடயங்களை ஒளித்து வைத்திருப்பான்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: