ரத்த அழுத்தத்தை மாத்திரையின்றி எளிதில் குணப்படுத்தக் கூடிய இயற்கை வைத்தியங்கள்!

0

ரத்த அழுத்தத்தை மாத்திரையின்றி கட்டுக்குள் வைத்திட நாட்டு வைத்தியங்கள்.

ரத்த அழுத்தம் என்பது சாதரண கோளாறு அல்ல. இது பலவித நோய்களை வரவழைக்கும். பக்க வாதம் வருவதற்கான மிக முக்கிய காரணங்களில் ஒன்று ரத்த அழுத்தம்.

ரத்த அழுத்ததை கட்டுக்குள் வைக்க அலோபதியைதான் நம்ப வேண்டியதில்லை. எளிதில் குணப்படுத்தக் கூடிய இயற்கை வைத்தியங்கள் நமது நாட்டில் உள்ளது.

ரத்த அழுத்தம் வராமல் காத்திட வேண்டும். ஆனால் ரத்த அழுத்தம் வந்தவர்கள் கட்டுக்குள் வைத்திட என்ன செய்யலாம்.இதோ உங்களுக்கான எளிய வழிகள்.

மோரில் எலுமிச்சை சாறு :
தினமும் டீ,காப்பிக்கு பதிலாக ஒரு டம்ளர் மோரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து குடித்தால் இரத்த அழுத்தம் குறையும்.

முருங்கைக் கீரை :
முருங்கைக் கீரை சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலையும் மாலையும் 2 கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.

வெந்தயம் மற்றும் பாசிப்பயிறு :
முழு வெந்தயம் 1 கரண்டி , பாசிபயறு 2 கரண்டி , கோதுமை 2 கரண்டி , இவற்றை முதல்நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை 2 மிளகு, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து , காலையில் வெறும் வயிற்றில் தோசை வார்த்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்.

அருகம்புல் :
அருகம்புல்லை நன்கு சுத்தம் செய்து கழுவி சாறு எடுத்து அதனுடன் ஐந்து பங்கு சுத்தமான தண்ணீர் சோ்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

அரைக் கீரை :
அரைக் கீரை சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகட்டுநாயக்கவில் இரகசியமாக தரையிறங்கிய விமானம்!
Next articleஒரு அதிர்ச்சி செய்தி! இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு கொண்டு வரப்பட்ட 700 குழந்தைகள்! கடத்தி வரப்பட்டார்களா?