அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம்!

0

அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை விடுமுறை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.

அரச ஊழியர்

அதன்படி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என்ற சுற்றறிக்கையை உடனடியாக இரத்துச் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை விடுமுறை
எரிபொருள் நெருக்கடி காரணமாக அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவைகளுக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொது அலுவலக விடுமுறையாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலேயே அரச ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்திற்கு முன்னதாக அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

பல தசாப்தங்களில் மோசமான நிதி நெருக்கடியுடன் போராடும் இலங்கை எரிபொருள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், உணவுப் பயிரிடுவதற்கும் அரச ஊழியர்களை ஊக்குவிக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 02.08.2022 Today Rasi Palan 02-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஆகஸ்ட் மாத ராசி பலன்கள். இந்த மாதம் பண அதிஷ்டம் இந்த ரசிக்காரர்களுக்கு!