அம்பாறையில் பரபரப்பை ஏற்படுத்திய குள்ள மனிதர்! ஏலியன்ஸ் தரையிறங்கியதா!

0
474

அம்பாறையில் நள்ளிரவில் வந்த குள்ள மனிதரால் அந்தப் பகுதியில் அச்சநிலை காணப்படுவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் இரவு நேரத்தில் வரும் 2 அடி நபரால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

குறித்த பகுதியில் வயல்களுக்கு பல முறை இந்த அமானுஷ்ய நபர் வந்து சென்றதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி தனது சோள பயிர்ச் செய்கைக்கு இரவு நேர பாதுகாப்பு வழங்கிய கருணாதிலக்க என்பவர் குள்ள நபரை பார்த்ததும் பயத்தில் ஓடிச் சென்றுள்ளார்.

அருகிலுள்ள விவசாயிகளையுடன் மீண்டும் அவ்விடத்திற்கு வந்த பார்த்த போது குள்ள மனிதர் மாயமாகியுள்ளார்.

தனது திகிலான அனுபவம் குறித்து கருணாதிலக்க கருத்து வெளியிடுகையில்,

நான் கடந்த இரண்டாடம் திகதி இரவு பயிர்களை பார்வையிடுவதற்காக வந்தேன். வந்த இடத்தில் சற்று ஓய்வு எடுக்கலாம் என நினைத்து ஓரமாக சாய்ந்து கொண்டேன்.

எனக்கு திடீரென சத்தம் ஒன்று கேட்டது. நான் எழுந்து லைட் அடித்து பார்க்கும் போது 2 அடியில் ஒருவர் நபர் நின்றார். தலை முடி நீளமாக வளர்ந்து காணப்பட்டது.

முகம் சிவப்பு நிறமாகவும், உள்நோக்கி சென்றது போன்று காணப்பட்டது. உதடுகளும் சிவப்பு நிறமாக காணப்பட்டன. நான் லைட் ஒளியை அவரது முகத்தில் அடித்து சத்தமிட்டேன். எனினும் அந்த நபர் ஒரு அடியேனும் நகரவில்லை. பின்னர் நான் அச்சமடைந்து ஓடிச் சென்றேன். ஏனைய விவசாயிகளை அழைத்து வந்தேன். எனினும் அந்த நபரை காணவில்லை.

குள்ள மனிதர் வந்து சென்றமைக்கான பாதச் சுவடுகள் ஆதாரமாக காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சில மாதங்களுக்கு முன்னர் அனுராதபுரம், பொலநறுவை பகுதிகளில் வெளிச்சமான பொருள் ஒன்று தரையிறக்குவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பில் ஆராய்ந்த துறைசார் அதிகாரிகள் அது பறக்கும் தட்டாக இருக்கலாம் என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குள்ள மனிதர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்கள் பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம்! இந்த இடங்களில் மச்சம் என்ன சொல்கிறது!
Next articleதம்பிக்கு கிடைத்த அரசு வேலை! அரக்கனாக மாறிய அண்ணன் செய்த கொடூரம்!