அம்பலப்படுத்திய மைத்திரி! ரணிலின் சூழ்ச்சித் திட்டத்தை!

0

பணம் கொடுத்து சொந்த கட்சியின் உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ளும் நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி இன்று தள்ளப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் நேற்று பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் உறுப்பினர்கள் சிலர் என்னை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறு கோரியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி தனது உறுப்பினர்களை பாதுகாத்துக்கொள்ள பணம் கொடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்வம் 14ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிக்கை விடுப்பேன்.

அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கத் தவறினால், அரசியல் அமைப்பு மற்றும் சட்டத்திற்கு அமைவாக அனைத்து வகையான துருப்பு சீட்டுக்களையும் பயன்படுத்த நேரிடும்.

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவை பாதுகாத்துக்கொண்டு நாடாளுமன்றின் முழுப் பதவிக் காலத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அரசியல் அமைப்பு மற்றும் சட்டம் தொடர்பான வல்லுனர்களின் ஆலோசனை வழிகாட்டல்களுக்கு அமையவே நான் தீர்மானங்களை மேற்கொண்டேன்.

நாடாளுமன்றை கலைக்க வேண்டிய எவ்வித அவசியமும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleடக்ளஸ் தேவானந்தாவை பொன்னாடை போர்த்தி வரவேற்ற சுமந்திரன்!
Next articleஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள இலங்கைக்கான அவசர அறிவித்தல்!