அமெரிக்காவில் நொடிப்பொழுதில் ஒரு மில்லியன் டொலரை வென்ற தமிழ் சிறுவன்…. அரங்கமே அதிர்ந்த தருணம்!

0
1574

’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்று உலக முழுவதிலுள்ள பொழுதுபோக்கு ரசிகர்களை தன்பக்கம் திருப்பி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.

’’தி வேர்ல்ட்’ஸ் பெஸ்ட்’ ’ என்ற பொழுத்து போக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதனை புகழ்பெற்ற ஹாலிவுட் தொகுப்பாளரான ஜேம்ஸ் கார்டன் தொகுத்து வழங்குகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து கலைஞர்கள் குழுவாகவும் , தனி நபராகவும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பியானா கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்து கொண்டார்.

லிடியன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது முதலே, தனது அசாத்திய திறமையால் ரசிகர்கள் பலரின் பாராட்டுதலை தொடர்ந்து பெற்று வந்தார்.

இதன் காரணமாக பிரபல ஹாலிவுட் டிவி நிகழ்சிகளான எலன் ஷோ உள்ளிட்டவைகளில் லிடியன் கலந்து கொண்டார்.

ரஹ்மான் உள்ளிட்ட இசை அமைப்பாளர்கள் லிடியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த போட்டியில் இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் லிடியன் நாதஸ்வரம்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடுவர்கள் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இசை கலைஞர்களை மகிழ்வித்த பட்டத்தை வென்ற லிடியனுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேடையில் லிடியனின் தந்தையும் உடனிருந்தார்.

லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் அவரது இல்லத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த பேப்பரை காலில் இப்படி சுற்றி வைத்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
Next articleசுப நாளில் வீட்டில் வாசலில் மா இழைகளை கட்டுவது ஏன் தெரியுமா?.. இதற்குதானாம் சுவாரசியமான தகவல்..!