அமெரிக்காவில் அம்பலப்படுத்திய ஜனாதிபதி மைத்திரி! இறுதிக்கட்ட போரில் மறைக்கப்பட்ட ரகசியங்கள்!

0
283

இறுதிக்கட்ட போரின் போது தென்னிலங்கை அரசியல் மட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போரின் இறுதி வாரங்களின் போது முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி நாட்டில் இருக்கவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் கொழும்பில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருந்தனர் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின், நிவ்யோர்க் நகரில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களை நேற்று சந்தித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இறுதிக்கட்ட போரின் கடைசி வாரங்களில் நடந்த விடயங்கள் எனக்கு மட்டுமே தெரியும். அந்தக் காலப்பகுதியில் பதில் பாதுகாப்பு அமைச்சராக நான் தான் கடமையாற்றினேன்.

நெருக்கடியான நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர் மற்றும் இராணுவ தளபதி என ஒருவரும் நாட்டில் இருக்கவில்லை.

இந்த விடயத்தை பலர் மறந்துவிட்டனர். அந்த நபர்கள் நாட்டை விட்டு சென்றது ஏன் என பலருக்கு தெரியாது. எனினும் எனக்கு தெரியும்.

இறுதி வாரங்களில் கிடைத்த அறிக்கை தான் அதற்கு காரணமாகும். விடுதலை புலிகள் பின்வாங்கப் போவதில்லை என கூறினார்கள். தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு நகரில் இருந்து கொழும்பை முழுமையாக அழிப்பதற்கு வானில் இருந்து குண்டு போடத் தயாராகவதாக அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்தது.

இதன் காரணமாக முக்கிய தலைவர்கள் நாட்டை விட்டு சென்றார்கள்.. இது தான் உண்மை கதையாகும்.

போரின் கடைசி இரு வாரங்களில் நான் கொழும்பில் இருக்கவில்லை. நான் ஒவ்வொரு இடமாக சென்றேன். நான் இருந்த இடத்தை ஒவ்வொரு முறை கண்டுபிடித்து விடுவார்கள். இது தான் போர் அனுபவம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் 73 ஆவது கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனார். இந்நிலையில் நேற்றைய மக்கள் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: