தினமும் ஒரு டம்ளர் பாலில் இந்த 10 வற்றல்களை ஊற வைத்து சாப்பிட்டால் நிகழும் மாற்றம் என்ன தெரியுமா?

0
1152

இன்றைக்கு நம்மில் நிறைய பேருக்கு ரத்தம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாம் உண்ணும் முழு உணவுகளின் மூலமாக ரத்தம் உற்பத்தி ஆவது இல்லை. அவ்வுணவில் உள்ள ஹீமோக்ளோபின் மூலமாகத்தான் ரத்தம் சுரக்கிறது. ஹீம் என்றால் இரும்பு. எனவே இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பண்டங்களை நுகர்வதன் மூலம் ரத்த உற்பத்தியையும், அதில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும்.

இரும்புச்சத்து நிறைவாக இருக்கும் உணவுகளை கேட்டால், பேரிச்சம், மாதுளை, பீட்ரூட் ஆகிய உணவுப்பொருட்களை எளிதில் சொல்லிவிடலாம்.ஆனால் வெறும் 1 சதவீதம் இரும்புச்சத்து கொண்ட அன்னாசியை நுகர்வதன் மூலமும் ரத்த உற்பத்தியை அதிகரிக்க முடியும். வியப்பாக இருக்கிறது அல்லவா? வாருங்கள் அன்னாசி பழத்தை கொண்டு எப்படி ரத்த உற்பத்தியை தூண்டலாம் என்பதை பார்ப்போம்.

நன்கு பழுத்த அன்னாசி பழத்தை தண்ணீரில் கழுவிவிட்டு, அதன் மேல் தோலை மட்டும் நீக்க வேண்டும்.இப்போது பழத்தை சிறு சிறு துண்டுகளாக, (நடுத் தண்டையும் சேர்த்து) வெட்டி வெயிலில் காயவைக்க வேண்டும்.

மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் அன்னாசி காய்ந்து வற்றல் போல மாறிவிடும்.பின்னர் இந்த வற்றலை காற்று புகாத பாத்திரத்திற்குள் சேமிக்க வேண்டும். தினமும் உறங்கச் செல்லும் முன்பாக, ஒரு டம்ளர் பாலில் 10 அன்னாசி வற்றல்களை போட்டு ஊற வைத்து சாப்பிட வேண்டும். பிறகு பாலை குடிக்க வேண்டும்.

தொடர்ந்து 60 நாட்களுக்கு இந்த வற்றலை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் ரத்த உற்பத்தி தூண்டப்படும், உடல் சக்தி பெறும். குறிப்பாக நோய் எதிர்ப்பு மண்டலம் பன்மடங்கு வலு பெற்றதாக மாறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: