அனைவரும் ஷாக், கமல் 60 விழாவில் வடிவேலு குறித்து பேசிய இயக்குனர் ஷங்கர்!

0
797

அனைவரும் ஷாக், கமல் 60 விழாவில் வடிவேலு குறித்து பேசிய இயக்குனர் ஷங்கர்!

சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவானாக திகழ்பவர் உலகநாயகன் கமலஹாசன். மேலும், நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உலக நாயகனாக நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார். மேலும்,60 ஆண்டுகள் சினிமா துறையில் அவர் பல சாதனைகளை புரிந்துள்ளார். அதோடு இதை கொண்டாடும் வகையிலும் கமல்ஹாசனை கவுரவிக்கும் வகையில் அவருக்கு விழா ஒன்று நடத்தப்பட்டது. அதோடு நடிகர் கமலஹாசனின் 60 ஆண்டு காலமாக திரைப் பயணத்தை கொண்டாடும் விதமாக “உங்கள் நான்” என்ன பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், இந்த விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் சிறப்பாக நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கமலுடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், அவருடைய நண்பர்கள் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், இவர்களோடு ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் கமல் 60 என்ற உங்கள் நான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல சினிமா பிரபலங்கள் கமல்ஹாசனை பாராட்டியும், வாழ்த்தியும் புகழ்ந்து தள்ளினார்கள். மேலும்,இந்த நிகழ்ச்சியில் இவர்களுடன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரும், நகைச்சுவை புயல் வடிவேலு அவர்களும் கலந்து கொண்டார்கள். அதோடு ஷங்கருக்கும், வடிவேலுக்கும் இடையே இருக்கும் தகராறு அனைவருக்கும் தெரிந்ததே.

இதனைத்தொடர்ந்து சங்கரின் 23 ஆம் புலிகேசி படம் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படம். இந்த படம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற படமாகும். மேலும், மீண்டும் வடிவேலுவை வைத்து சங்கர் 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம் இயக்க இருந்தது. ஒருவேளை வைஷ்ணவி ஐடியாவோ. கிண்டலுக்குள்ளான புகைப்படம். ஆனால், வடிவேலு அவர்கள் நான் இந்த படத்தில் நடிக்கமாட்டேன். அப்படி நான் நடிக்க இருந்தால் பெரிய நடிகர்களின் பட்டாலும் இருக்கக்கூடாது மற்றும் எனது ஆடை வடிவமைப்பாளரை நான் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் பல விதிமுறைகளை விதித்தார். இதனால் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம், மேலும் இந்த படம் அப்படியே முடங்கி விட்டது. இதனால் வடிவேலு மீது பயங்கர கோபத்துடன் இருந்தார் சங்கர்.

இந்நிலையில் உங்கள் நான் கமலஹாசன் நிகழ்ச்சியில் வடிவேலு பேசிய காமெடிகளை கேட்டு சங்கர் பயங்கரமாக விழுந்து விழுந்து சிரித்து இருக்கிறார். இது பார்க்கும்போது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. அது மட்டுமில்லாமல் சங்கர் அவர்கள் மேடையில் பேசும் போது குசேலன் படத்தில் வடிவேலு அவர்கள் எப்படி ரஜினி சாரை பார்த்து வியப்பில் நின்றாரோ!! அதே போல் தான் நான் கல்லுரி படிக்கும் போது கமலஹாசனை முதன் முதலில் பார்க்கும் போது வியந்து போய் நின்றேன் என்று கூறினார். இப்படி இவர் பேசுவதை பார்க்கும் போது இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த பிரச்சனை முடிந்து விட்டது போல என்று தெரிகிறது.

அது மட்டுமில்லாமல் மீண்டும் வடிவேலுவை வைத்து 23 ஆம் புலிகேசியின் பாகம்-2 எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என கூறி வருகின்றனர் ரசிகர்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் மட்டும் அஜித்துக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது என அனைவருக்கும் தெரிந்தது தான். மேலும், விஜய் அவர்கள் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அவரால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. மேலும், வழக்கம் போல நம்ம தல அஜித்தும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று தெரிந்தது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாரணம் அஜித்தின் தந்தை தானாம், கமல் அழைத்தும் விழாவிற்கு வராதா அஜித்!
Next articleமஞ்சள் நிற உடையில் அழகான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் லாஸ்லியா !