அனுராதபுரம்‍‍‍‍‍_ ‍‍‍‍‍தத்தெடுத்து வளர்த்த மகளை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

0

அனுராதபுரம் – ஹொரவபொத்தான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 11 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரவபொத்தான – வலிமபொத்தானை பகுதியை சேர்ந்த இராணுவ சிவில் ஊழியராக கடமையாற்றி வரும் எம்.ரத்னசிறி விக்கிரமநாயக்க (48 வயது) என்பவரே இன்றைய தினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் தெரிவிக்கையில்,

சந்தேகநபர் இரண்டாவது மனைவியுடன் வசித்து வந்த நிலையில் குறித்த சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று தாம் கடைக்கு சென்ற வேளையில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டவருடைய மனைவி சிறுவர் மற்றும் பெண்கள் அமைப்பிற்கு தகவல் வழங்கியுள்ளார்.

குறித்த தகவல்களுக்கு அமைய கைது செய்யப்பட்ட சந்தேகநபரை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை அனுராதபுர போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் ஹொரவபொத்தான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை வரலாற்றில் முதல் முறையாக ரூபாயின் பெறுமதி 176 ரூபாயை கடந்துள்ளது!
Next articleமுடி நன்கு வேகமாக வளர இந்த முறையை பயன்படுத்தி பாருங்க!