திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தனிக்குடித்தனம் செல்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கணவன்- மனைவி அடுத்தடுத்து இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் ரிச்சர்டு பிராங்ளின் (30). ஜெபக்கூட்டத்தில் போதகராக இருந்து வரும் ரிச்சர்டு, அவினாசி தாரம்பாளையத்தை சேர்ந்த ஜெர்சி (28) என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்துள்ளார்.
பிரசவத்திற்காக தாய் வீட்டில் வீட்டில் இருந்த ஜெர்சிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் மனைவியை பார்ப்பதற்காக அவிநாசிக்கு சென்ற இடத்தில் தனிக்குடித்தனம் போகலாம் என ஜெர்சி பேச்சு கொடுத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ரிச்சர்டு, அனைவரும் கூட்டு குடும்பமாக இருக்கலாம் என கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ரிச்சர்டு, வேகமாக பெட்ரோலை எடுத்துவந்து உடல் முழுவதும் ஊற்றியுள்ளார். அதனை பறிக்க முயன்ற போது ஜெர்சியின் உடலிலும் பெட்ரோல் விழுந்துள்ளது.
உடனே கையில் வைத்திருந்த தீப்பட்டியை கொண்டு ரிச்சர்டு உடலில் தீ வைத்துள்ளார். வலி தாங்கள் முடியாமல் கதறிய கணவனை காப்பாற்ற சென்ற ஜெர்சியின் மீதும் தீ பரவியுள்ளது.
இதனையடுத்து பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அடுத்தநாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.