அந்த மாமாவை தயவு செய்து விட்டுற சொல்லுங்கப்பா என கெஞ்சிய சிறுமி!

0
446

தமிழகத்தில் விபத்தில் சிக்கிய சிறுமி விபத்திற்கு அந்த டிரைவர் காரணமில்லை எனவும், என்னுடைய தவறு தான் காரணம் அவரை விட்டுவிடுங்க என தந்தையிடம் கூறியிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமி இசை என்பவர் தன்னுடை காலனியில் நடந்த திருவிழாவின் போது, சக தோழிகளோடு விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாரதவிமாக அங்கு வந்த கால் டாக்ஸி ஒன்று, இசையின் மீது மோதியுள்ளது. இதனால் கீழே விழுந்த இசையின் கால்மீது டாக்சியின் சக்கரம் ஏறிவிட்டது.

இதனால் அந்த சிறுமி தற்போது மூன்று அறுவை சிகிச்சைகளை தாண்டியிருக்கிறாள்.

இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமியின் தாயார் கூறுகையில், தங்களுடைய காலனியில் நடந்த விழாவில் ஒரு போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் என்னுடைய பெரிய மகள் ஓட்டப்பந்தயத்தின் போது, தடுமாறி கீழே விழுந்துவிட்டாள்.

இதை தெரிவிப்பதற்காக சிறிய மகள் இசை வேகமாக ஓடிவந்துள்ளார். அப்போது இந்த சம்பவம் நடந்துவிட்டது. நாங்கள் அவளை சென்று பார்த்த போது கதறி அழுதோம், துடி துடித்து போனோம் அதன் பின் தற்போது அவள் மேற்கொண்டு வரும் சிகிச்சையால நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் மீது இசையின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் பொலிசார் அவரை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த சிறுமி இவர் தான் மோதினார் என்று கூறியிருந்தால், ஓட்டுனருக்கு கண்டிப்பாக சிறை தண்டனை கிடைத்திருக்கும். ஆனால் அவர் தந்தையிடம் என்ன சொன்னார் தெரியுமா?

அந்த மாமாவை விட்டுருங்க. இந்த விபத்திற்கு நான்தான் காரணம். அவசரத்தில் வேகமா ஓடிப்போய் காரில் இடிச்சுக்கிட்டது நான்தான். அவர் மேல் எந்த தவறும் இல்லை.

தயவு செய்து அவரை விட்டுவிடுங்க, என கூறியுள்ளார். மேலும் அப்பா, அந்த மாமாவை விட்டுடச் சொல்லுங்க எனக் கெஞ்சியிருக்கிறார். மகளின் ஆசைக்காக, தந்தை விவேக் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதுமட்டுமா, அந்த ஓட்டுனரை போனில் தொடர்பு கொண்ட இசை தப்பு என் மேல தான் அண்ணா. அக்கம் பக்கம் கவனிக்காமல் ஓடியது என் தப்புதான், அங்க பாட்டு ஓடிக் கொண்டிருந்ததால், நீங்கள் அடித்த ஹாரன் சத்தம் கேட்கவில்லை, மன்னித்துவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: