அன்று இருவரும் சேர்ந்து எடுத்த அந்த நெருக்கமான புகைப்படம் தான் எங்களது காதலை சிதைத்தது!

0
3363

நான் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்..! எனக்கு முதல் முதலாக காதல் என்ற ஒரு அனுபவத்தை உணரச் செய்தவள் நித்யா..! அவள் என்னுடன் கல்லூரியில் பயின்ற ஒரு மாணவி..! எனது பெயரும் அவளது பெயரும் கல்லூரி அட்டனன்சில் அடுத்து அடுத்து வரும்..! எங்களுக்குள் காதல் மலர அதுவும் ஒரு காரணமாக இருந்தது…!

அவள் கல்லூரிக்கு சீக்கிரமாகவே வந்துவிடுவாள் என்பதால், அவளுடன் பேசுவதற்காக நான் காலையில் நேரத்திலேயே கல்லூரிக்கு வந்துவிடுவேன்..! நான் அவளுடன் கழிக்கும் நேரங்கள் மிகவும் இனிமையானதாக இருக்கும். மதிய உணவை இருவரும் பகிர்ந்து கொள்வோம்..! மாலையில் வீடு திரும்பும் போதும் ஒன்றாக தான் செல்வோம்..!

நான் ஐ.டி படித்ததால் எங்களுக்கு கணினி ஆய்வு வகுப்புகள் நடக்கும். அதில் நாங்கள் இருவரும் அருகருகே தான் அமர்ந்து கொள்வோம்…! எங்களது கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் கூட்ட நெரிசலாக இருக்கும் என்பதால், இருவரும் அடுத்த பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று பேருந்து ஏறுவோம்…!

நான் அப்போது கல்லூரியில்
நான் அப்போது கல்லூரியில்

ஆழமான காதல்
அடுத்த பேருந்து நிறுத்தத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கும்.. அந்த பாதை இயற்கை எழில் சூழ்ந்து இருக்கும்..! அந்த பாதையில் இருவரும் கதை பேசிக் கொண்டு மெதுவாக நடந்து செல்வோம்.. நான் கல்லூரிக்கு செல்வதற்கு முக்கிய காரணமாக அவள் இருந்தாள்..! அவளை நான் மனதார நேசித்தேன்..! அது அவ்வளவு ஆழமான காதல்..!

மகிழ்ச்சியாக கழிந்த நாட்கள்
அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது..! என் வாழ்க்கையில் கிடைத்த அரிய பொக்கிஷம் அவளது காதல்..! எப்போதும் துறுத்துறுவென எதையாவது பேசிக் கொண்டேயிருப்பாள்…! என் முகம் சிறியதாக கொஞ்சம் வாடியிருந்தாள் கூட அவளது கண்கள் கலங்கிவிடும்…! எனக்காக எதையும் செய்யும் அவளது குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது..! அவளுடன் எங்களது ஊரில் நான் சுற்றாத இடம் இல்லை என்று கூறலாம்..! இப்படி எங்களது காதல் வாழ்க்கை இரண்டு ஆண்டுகள் மகிழ்ச்சியாக தான் சென்று கொண்டிருந்தது…!

சுற்றுலா
எங்களது கல்லூரி இறுதி ஆண்டில் கல்லூரி சுற்றுலாவிற்கு நாங்கள் கொச்சின் சென்றோம்..! நாங்கள் இருவரும் சேர்ந்து முதல் முறையாக நீண்ட தூர பயணம் செல்வது இதுவே முதல் முறையாகும். இந்த சுற்றுலா நாங்கள் மிக நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து கிடைத்த ஒன்று..! இந்த சுற்றுலாவில் எங்களது பல ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டோம்..!

அன்று எடுத்த அந்த நெருக்கமான
அன்று எடுத்த அந்த நெருக்கமான

பொறாமை கொள்ளும் காதல்
சுற்றுலா செல்ல அனைவரும் மிக உற்சாகமாக புறப்பட்டோம்..! பேருந்து புறப்பட்ட உடனேயே, மிகுந்த ஆராவாரத்துடன் அனைவரும் கத்த ஆரம்பித்துவிட்டார்கள்..! குத்து பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன..! அவளுடன் ஆட வேண்டும் என்று ஒரு ஆசை எனக்கு இருந்தது.. அவளை நான் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன்.. ஆனால் அவள் வரவே இல்லை…! நேரங்கள் கடந்தன.. நல்லிரவு ஆனாலும், எங்களது ஆட்டம் பாட்டம் எல்லாம் தொடந்து கொண்டே தான் இருந்தது..! அவளும் என்னுடன் சேர்ந்து ஆட வந்தாள்.

இப்படி ஒரு ஜோடியா?
அவள் என்னுடன் ஆட வரும் போதே, வகுப்பில் உள்ள அனைவரும் கை தட்டி, கத்த ஆரம்பித்து விட்டார்கள்…! அவள் இவ்வளவு நன்றாக ஆடுவாள் என்று எனக்கு இதுவரை தெரியாது…! அப்படி ஒரு ஆட்டம் எங்களது வகுப்பில் உள்ளவர்கள் எங்களது ஜோடியை கண்டு கண் வைத்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்..! அந்த அளவுக்கு ஆடி மகிழ்ந்தோம்..! இரவெல்லாம் தூங்கவே இல்லை..!

நெருக்கமானோம்
ஒரு பெரிய ஹோட்டலுக்கு சென்று எங்களது வகுப்பில் இருந்த அனைவரும் ப்ரஸ் ஆகிவிட்டோம்..! அதன் பின்னர் நாங்கள் ஒரு கம்பெனிக்கு சென்றோம்… இரவெல்லாம் தூக்கமே இல்லை என்பதால் கண்கள் எல்லாம் தூக்கம் வழிந்தது…! அதன் பின் ஊரை சுற்றிப் பார்க்க சென்றோம்…! அப்போது தான் தூக்கமே தெளிந்தது..! அவளுடன் மிக மிக நெருக்கமாக இருந்தது அப்போது தான்…!

காதலை சிதைத்தது
காதலை சிதைத்தது

தீண்டல்கள்
அவளுடன் மிக நெருக்கமாக சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டேன்.. ரம்யமான சூழலில் பல காதல் பேச்சுக்கள், குளிருக்கு இதமான சின்னச்சின்ன தொடுதல்கள் என்று மூன்று நாள் கல்லூரி சுற்றுலா இனிதே முடிந்தது…! சொல்லப்போனால் இது தான் நாங்கள் இன்பமாக இருந்த கடைசி நாளும் கூட…!

காதலில் இடி விழுந்தது
நாங்கள் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் அவளது அப்பாவின் கண்களில் படவே எங்களது காதலுக்கு சோதனை காலம் ஆரம்பித்துவிட்டது…! அவளது அப்பா கல்லூரிக்கு வந்து சண்டை கட்டினார்…! என்னை அனைவரது முன்னிலையில் கேட்க கூடாத கேள்விகளை எல்லாம் கேட்டார்…! நான் குனிக்குறுகி நின்று கொண்டிருந்தேன்…! அவளது அப்பா, என்னை திட்டியது மட்டுமல்லாமல் இனிமேல் அவளுடன் பேச கூடாது என்ற தடையையும் விதித்தார்…!

தனிமை என்னும் கொடுமை
அவளது நன்மைக்காக, நானும் அவளுடன் பேசாமல் தான் இருந்தேன்.. அவளும் என்னுடம் பேசவில்லை.. தனித்தனியாக அமர்ந்து சாப்பிட்டோம்…! தனித்தனியாக வீட்டிற்கு சென்றோம்…! வாழ்க்கையே வெறுத்தது போல ஆனாது…! அவள் இல்லாமல் நான் கழித்த நேரங்கள் எனக்கு வெறுமையை கொடுத்தது..! ஒரு நாளை கடந்து செல்வது என்பது எனக்கு பல யுகங்களை கடப்பது போல இருந்தது…! சோக பாடல்களையே தான் கேட்டுக் கொண்டிருந்தேன்..!

எதிர்பாரா தருணம்
ஒரு கட்டத்தில் அவளாலும் என்னுடன் பேசமால் இருக்க முடியவில்லை… நான் அப்போது பேருந்திற்காக நின்று கொண்டிருந்தேன்.. அவள் சுற்றி சுற்றி பார்த்து விட்டு என் அருகில் பேசிவதற்காக வந்தாள்..! அவள் என்னுடன் பேசுவதற்காக வாயை திறந்த அடுத்த நொடியே அவளது அப்பா, வந்துவிட்டார்…! நாங்கள் இருவரும் இன்னும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம் என்று அவர் நினைத்துக் கொண்டார்….! நாங்கள் சொல்ல வருவதை கேட்பதற்கும் அவர் தயாராக இல்லை..!

நெருக்கமான புகைப்படம் தான்
நெருக்கமான புகைப்படம் தான்

கல்லூரிக்கு வரவில்லை
இந்த சம்பவத்திற்கு பிறகு, அவள் கல்லூரிக்கே வரவில்லை…! நான் அவள் ஒரு நாள் கல்லூரிக்கு வந்துவிடுவாள் என்று காத்திருந்து காத்திருந்து பார்த்தேன்..! ஆனால் இரண்டு வாரங்களாக அவள் கல்லூரிக்கே வரவில்லை.. அவளது வீட்டிற்கு சென்று அவளது அப்பாவிடம் பேசலாம் என்று தோன்றியது.. மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என்ன ஆனாலும் பரவயில்லை என்று சென்றேன்..!

துரத்திய அம்மா..
வீட்டில் அவளது அம்மா மட்டும் தான் இருந்தார்கள்..! அவர் என்னை கண்டதும் பதறினார்.. என்னிடம் ஒரு நிமிடம் கூட நின்று பேசவில்லை.. அவரது பேச்சில் பதற்றம் தெரிந்தது..! நான் அப்பாவை பார்க்க வேண்டும்… நான் அவரை சமாதானம் செய்கிறேன் என்று கூறினேன்.. அவங்க அப்பா ஒரு ரவுடி தம்பி, நீங்க இங்க வந்தது தெரிஞ்சா எங்களோட சேர்த்து உங்களையும் கொன்னு போட்டுறுவார்… தயவு செஞ்சு, கிளம்புங்க.. கிளம்புங்க என்று கெஞ்சினார்..! எனக்கு என்ன செய்வது என தெரியாமல் வந்துவிட்டேன்..!

காத்திருந்தேன்
நடப்பது நடக்கட்டும் என்று அவளது அப்பாவை பார்க்க அவரது ஆபீஸ்க்கு போனேன்…! அவர் அங்கே இல்லை.. வரும் வரை காத்திருக்கலாம் என்று தண்ணீர் கூட குடிக்காமல் இரவு வரை காத்திருந்தேன்.. கடைசி வரை அவர் வரவேயில்லை..! ஏமாற்றத்துடன் நான் வீடு திரும்பிவிட்டேன்..!

எங்களது காதலை
எங்களது காதலை

இதை எதிர்பார்க்கவில்லை
அவள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அவளது தோழி மூலமாக, அவளுக்கு அடுத்த வாரமே திருமணம் நடக்க போவதாக எனக்கு தகவல் கிடைத்தது..! என் மனைவியை எப்படி என்னால் இன்னொருவருக்கு விட்டுதர முடியும்? என்னால் அவளை திருமணம் செய்து கொள்ளவும் முடியவில்லை.. ஏனென்றால் நான் அப்போது தான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்..! அவளை விடவும் முடியவில்லை.. இப்படி ஒரு நிலை என் எதிரிக்கு கூட வரக்கூடாது…!

கடைசியில் அவளது திருமணம் வேறு ஒருவனுடன் நடந்து முடிந்தது…! நான் இப்போது என்ன செய்வது, என் வாழ்க்கை எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என எதுவும் தெரியாமல், வாழ வேண்டுமே என்பதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: