விஜய்யுடன் தற்போது விஜய் 62 படத்தில் ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சுரேஷ். ஏற்கனவே அவருடன் பைரவா படத்தில் ஒன்றாக நடித்து விட்டார். இவர் விஜய்யின் ரசிகையும் கூட.
அண்மையில் ஒரு இணையதள சானல் ஒன்று விருது வழங்கும் விழாவினை நடத்தியுள்ளது. இதில் கீர்த்திக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.
மேடையில் இயக்குனர் அட்லீயிடம் விருதை பெற மேலே வந்திருக்கிறார் கீர்த்தி. அப்போது அட்லீ என்னுடைய அடுத்த படத்தின் ஹீரோயின் இவர் தான் என ஒரு பாட்டியை அழைத்தார்.
அவர் வேறு யாருமல்ல. கீர்த்தி சுரேஷின் பாட்டி. இது கீர்த்திக்கும் பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அட்லீயின் அன்புக்கட்டளைக்காக அந்த பாட்டி தான் அவருக்கு விருதை வழங்கினார்.
மேலும் அவர் இந்த பாட்டி கீர்த்தியை விட நன்றாக நடிப்பார் என கூறினார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: