அதிர்ஷ்டம் கிடைக்க கையில் உப்புடன் கிழக்கு நோக்கி அமர்ந்து இதை சொல்லுங்கள்!

0
1753

திருஷ்டி சுத்தும் போதும், மந்திரிக்கும் போதும் கல் உப்பை வைத்து சுற்றி போடுவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.

அதேபோல் சில கோயில்களில் பிரச்னைகள் தீர வேண்டும் என்பதற்காக உப்பை வாங்கிக் கொண்டு கொட்டுவார்கள். பாவம் விலக வேண்டும் என்பதற்காக, உப்பு நிறைந்த கடல் நீரில் சென்று குளிக்கிறோம்.

இதெல்லாம் ஒரு மூட நம்பிக்கை என்று கூறினாலும், இதற்குள் சில அறிவியல் ரகசியங்களும் உள்ளது.

கல் உப்பு பற்றிய அறிவியல் ரகசியம் என்ன?

அறிவியலில் நம் வாழ்க்கையை வழி நடத்திச் செல்லும் எதிர்மறை மற்றும் நேர்மறை சக்தியை ஓரா சயின்ஸ் என்று கூறுவார்கள்.

உப்பு எதிர்மறை சக்தியை வெளியேற்றும் ஒரு பொருள். கைக்குள் உப்பை வைத்துக் கொண்டு நேர்மறையாகப் பேசினால் உடலில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். நேர்மறை அலைக்கற்றைகள் நம்மைச் சுற்றி பரவ ஆரம்பிக்கும்.

இதனால் சிலர் உப்பை கடன் வாங்கினாலும் கைகளில் வாங்க மாட்டார்கள். ஏனெனில் உப்பை கொடுப்பவர்களிடம் இருக்கும் எதிர்மறை சக்தி மற்றவர்களிடம் வந்துவிடும் என்ற ஒரு ஐதீகம் தான் காரணமாகும்.

அதிர்ஷ்டம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

அதிகாலையில் எழுந்ததும் இரண்டு கைகளிலும் கல் உப்பை வைத்து கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து, மடியில் ஒரு வெள்ளை பேப்பரை வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் கைகளில் உப்பை இறுக்கமாக மூடிக் கொள்ள வேண்டும். அதன் பின் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மனதுக்குள் அல்லது வாய்விட்டு வெளிப்படையாக 10 நிமிடங்கள் வரை சொல்ல வேண்டும்.

அதன்பின்னர் கையில் வைத்திருக்கும் உப்பை மடியில் உள்ள வெள்ளை பேப்பரில் போட்டு நன்றாக மடித்து, அதை ஓடும் தண்ணீரில் விட்டு விட வேண்டும்.

இப்படி செய்து வந்தால், நேர்மறை சக்திகள் அதிகரித்து, நம்மிடம் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் மாயமாய் விலகும் என்பது நம் முன்னோர்களின் ஐதீகமாக உள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: