அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர்! – ஆக்‌ஷன் திரைப்படம் இத்தனை கோடி நஷ்டம்!

0
361

அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர்! – ஆக்‌ஷன் திரைப்படம் இத்தனை கோடி நஷ்டம் !

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்துள்ளது. 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது என்று கூறுகிறார்கள். 

வழக்கமாக காமெடி கலந்த கமர்ஷியல் படங்கள் இயக்கும் சுந்தர் சி, இந்த முறை முழுக்க ஆக்க்ஷன் காட்சிகளுடன் படம் இயக்கியிருந்தார்.
ஆனால், இந்த முயற்சிஅவருக்கு வொர்க்-அவுட் ஆகவில்லை. இந்நிலையில், ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பளார் கே.ராஜன் நடிகர் விஷாலை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

 அவர் பேசியதாவது, ஆக்ஷன் படத்தால் 16 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், வெளியான அயோக்யா படத்தால் 9 கோடி நஷ்டம் ஏற்பட்டது. பல தயாரிப்பாளர்களை விஷால் காலி பண்ணிட்டார் என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: