அதிர்ச்சியில் மனைவி! திருமணமாகி 2 நாட்களில் கணவனின் மோசமான செயல்!

0
270

களனியில் திருமணமான இரண்டு நாட்களின் கணவனின் மறுபக்கத்தை தெரிந்த கொண்ட மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

போதைப்பொருளுக்கு அடிமையான கணவன், திருமணமான இரண்டு நாளில் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

கஞ்சாவை தன்வசம் வைத்திருந்த நபர் ஒருவரே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் போதைப்பொருளுக்கு தீவிரமாக அடிமையானவர் என களனி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு முன்னர் கஞ்சாவுக்கு அடிமையாகியிருந்த குறித்த நபர் திருமணத்திற்கு பின்னரும் அவரால் அந்த பழக்கத்தை கைவிட முடியாமல் போயுள்ளது.

இந்நிலையில் மனைவிக்கு தெரியாமல் கஞ்சா பயன்படுத்த சென்ற குறித்த நபர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.

தான் கஞ்சா வைத்திருந்த விடயத்தை மனைவிக்கு தெரிவிக்க வேண்டாம் என அவர் பொலிஸாரிடம் கெஞ்சியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பலத்த நம்பிக்கையுடன் வாழ்க்கை பயணத்தில் இணைந்த புதுமண பெண்ணுக்கு, கணவன் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்ற விடயம் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக மணப்பெண் உட்பட குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: