நடக்கவிருக்கும் அதிசார குரு பெயர்ச்சியால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் கோடீஸ்வரராகும் யோகம் அமையப்போகிறது!

0
1837

நடக்கவிருக்கும் அதிசார குரு பெயர்ச்சியால் இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் கோடீஸ்வரராகும் யோகம் அமையப்போகிறது!

குரு பகவான் தற்போது மகர ராசியில் சனிபகவானுடன் இணைந்து சங்சரிக்கிறார். பங்குனி 23ஆம் தேதி அதாவது ஏப்ரல் 5 ஆம் தேதி நள்ளிரவில் அதிசாரமாக கும்ப ராசிக்கு பயணம் செய்யவுள்ளார். செப்டம்பர் 15ஆம் தேதி வரை கும்ப ராசியில் அமர்ந்து பலன்களைத் தருவார் குருபகவான். 162 நாட்கள் அதிசாரமாக பயணிப்பதால் மேஷம், மிதுனம், மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு எப்படி திடீர் ராஜயோகமும் கோடீஸ்வர யோகமும் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம் ராசி: ராசி மண்டலத்தில் முதல் ராசி மேஷம். பத்தில் குரு இருந்து பாடாக படுத்தியிருக்கும் வேலையில் பிரச்சினை ஏற்பட்டு இந்த வேலையை விட்டு போய்விடலாமா என்று கூட யோசித்துக்கொண்டிருப்பீர்கள். உங்களின் கஷ்டத்திற்கு விடிவுகாலம் வந்து விட்டது. மேஷ ராசி மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் தன காரகன் குரு பகவான் பயணம் செய்வதால் இனி அதிர்ஷ்டகரமான காலம்தான். மேஷ ராசி, மேஷ லக்னகாரர்களுக்கு குரு பகவான் பாக்யாதிபதி, மோட்ச விரைய ஸ்தான அதிபதி. அவர் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் செய்யும் முதலீடுகளுக்கு நிறைய லாபத்தை அள்ளிக்கொடுப்பார் குரு பகவான். தொடங்கும் புதிய தொழில் விருத்தியடையும். திடீர் யோகம் தேடி வரும். கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும் யோகம் கை கூடி வரப்போகிறது.

மிதுனம் ராசி: மிதுன ராசி மிதுன லக்னங்களில் பிறந்தவர்களுக்கு ஆனந்தம் ஆனந்தம் என்று பாடப்போகிறீர்கள். அஷ்டம ஸ்தானத்தில் சனியும் குருவும் சஞ்சரித்ததால் குடும்ப பிரச்சினை, வேலையில் பிரச்சினைகள் சந்தித்து வந்தீர்கள். இனி ஒன்பதாம் வீட்டிற்கு செல்லப்போகும் அதிசார குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். ஆனந்தமும் அதிர்ஷ்டமும் நிறைந்த காலமாக அமையப்போகிறது. பாக்ய ஸ்தானமான 9ஆம் வீட்டில் குரு பகவான் சஞ்சரிப்பதால் நிறைய நன்மைகளும் பாக்யங்களும் தேடி வரப்போகிறது. திருமண யோகம் கைகூடி வரும். வேலை தொழிலில் இருந்த பிரச்சினைகள் தீரும். திடீர் பண வரவு வந்து உங்களை திக்குமுக்காட வைக்கும்.

மகரம் ராசி: இந்த அதிசார குரு பெயர்ச்சி மகர ராசி மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டத்தையும் யோகத்தை தரப்போகிறார். ஜென்ம ராசியில் சஞ்சரித்த குரு பகவான் இரண்டாம் வீடான குடும்ப, வாக்கு, தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். தன ஸ்தானத்தில் தன காரகன் குருபகவான் அதிசாரமாக செல்லும் போது திடீர் பண வரவு அதிகரிக்கும். பிரம்மாண்டமான யோகத்தை தரப்போகிறார் குரு பகவான். பங்குச்சந்தையில் நீங்கள் செய்யும் முதலீடுகளுக்கு நல்ல லாபம் உண்டும். வேலை செய்யும் இடத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும்.

கும்பம் ராசி: கும்ப ராசி கால புருஷ தத்துவத்தின்படி 11வது ராசி. கும்ப ராசியில்தான் ஜென்மகுருவாக அமரப்போகிறார் குருபகவான். கும்ப குரு வளைய குரு. ராஜயோகத்தை தரப்போகிறார். குருவின் சஞ்சாரத்தினால் கும்பம் ராசி கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு முதல்தரமான கோடீஸ்வர யோகம் தேடி வரும். செய்யும் தொழில் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். லாட்டரி சீட்டு வாங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும். திடீர் கோடீஸ்வரர் ஆகும் யோகம் தேடி வரும். இந்த அதிசார குரு பெயர்ச்சியால் சாதாரணமானவர்கள் கூட திடீர் கோடீஸ்வரர் ஆகும் யோகத்தை குருபகவான் கொடுப்பார். குரு பலன் குரு பார்வை கிடைத்தால் பொன்னான யோகம் தேடி வரும். உங்கள் ஜாதகத்திலும் கிரகங்கள் சாதகமாக இருந்து தசாபுத்தியும் சரியாக இருந்தால் குரு பகவான் கோடீஸ்வர யோகத்தை நிச்சயம் கொடுப்பார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: