அதிகாலையில் யாழில் நடந்த பயங்கரம்: சிறுமி கொலை!

0
783

யாழில் இன்று காலை இடம்பெற்ற துயர சம்பவத்தில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் சம்பவ நேரத்தில் குழந்தையை அவரது பாட்டியினிடத்தில் விட்டுவிட்டு வைத்தியசாலைக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலையாளி தனது தாயையும் வெட்டிவிட்டு தனது சகோதரனின் குழந்தையையும் கொன்றுள்ளார் என கொலையாளியின் தந்தை பொலிஸாரினிடத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்போது உயிரிழந்த குழந்தை தனது மழலை பேச்சால் அப்பகுதியில் இருக்கும் அனைவரிடத்திலும் தனி செல்வாக்கைப் பெற்றிருந்தாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது, 3 வயதுடைய தனுசன் நிக்சையா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை, வடமேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் மூன்று வயது குழந்தை உயிரிழந்ததுடன் கொலையாளி தானும் நஞ்சருத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் தாய் ஒருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் தாக்குதலை மேற்கொண்டு நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டவர் 33 வயதான ஈஸ்வர் என்று தெரியவந்துள்ளது.

மேலும், 3 வயதாகிய தனுசன் நிக்சையா என்ற குழந்தை உயிரிழந்துள்ளதுடன், 55 வயதுடைய பலமேஷ்வரி என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்த நபர் குறித்த தாயின் மூத்த மகனாவார். இவர் தனது மகள் முறையான சகோதரனின் மகளையும் தாயையும் கொடூரமாக வெட்டியுள்ளார்.

இது தொடர்பாக தெரிய வருகையில்,

தற்கொலை செய்து கொண்ட நபரின் தாயும், அவருடைய சகோதரனின் 3 வயது மகளும் வண்ணார்பண்ணை, வடமேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர்.

அப்போது குறித்த நபர் அங்கு சென்று, வீட்டில் இருந்த தாய் மற்றும் குழந்தை மீது கொடூரமாக கோடரியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன், தாயார், கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த கொலையாளியான ஈஸ்வர், நஞ்சை உட்கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கான காரணம் வெளிவராத நிலையில், யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: