உங்களுக்கு அதிகமாக முடி உதிர்கிறதா! உதிர்வை தவிர்க்க இவற்றை செய்து பாருங்கள்!

0
1651

உங்களுக்கு அதிகமாக முடி உதிர்கிறதா! உதிர்வை தவிர்க்க இவற்றை செய்து பாருங்கள்!

hair fall

அழகுக்கு என்றே நாம் தனியாக எந்த மெனக்கெடல்களும் எடுத்துக் கொள்ள வேண்டாம். அதை விட அதிகமாக செலவழிக்க வேண்டுமே என்ற பயம் வேண்டாம் மாறாக வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்ட நம்முடைய அழகை பேணிக்காக்க முடியும்.

சுண்டல் சமைத்து சாப்பிட்டுருப்ப்போம். அது சத்தானதும் கூட சுண்டலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆந்தோசையனின்கள், டெல்பின்டின், சியானிடின், பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் போன்றவை உள்ளது. மேலும் இதில் ஃபோலேட் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. இதனால் இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.

மேலும் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கிறது. இதனால் அதில் உள்ள கார்போஹைட்ரேட் உடைந்து மெதுவாக செரிமானமாகும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படும்.

இவ்வளவு நன்மைகள் கொண்ட சுண்டல் உடல் நலத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் மிகவும் நன்மைத்தரக்கூடியது. சுண்டலை வைத்து சருமத்தையும் தலைமுடியையும் எப்படியெல்லாம் பராமரிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இன்றைய நடுத்தர வயதினருக்கு இருக்கும் பயமே இது தான். தங்கள் முகத்தில் சுருக்கங்கள் வந்து விடக்கூடாது என்பது தான். சுண்டலில் இருக்கும் மேக்னீசியம் சருமத்தை சுருக்கங்களிலிருந்து பாதுகாக்கிறது.

அதோடு சுண்டலில் இருக்கும் ஃபோலேட் மற்றும் விட்டமின் பி சருமத்தில் இருக்கும் செல்களை துரிதமாக வேலை செய்யத் தூண்டுகிறது. இதனால் சருமம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

சுண்டலை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து பாலில் கலந்து பேஸ் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். இது சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை எல்லாம் நீக்கிடும். இதனால் சருமத்தில் எந்த பிரச்சனைகளும் ஏற்படாது.

சருமத்தில் உள்ள அழுக்குகளை எல்லாம் நீக்கும் வேலை செய்கிறது இந்த க்ளன்சர். சுண்டலை ஊற வைத்த நீரைக் கொண்டு முகத்தை கழுவலாம். அல்லது சுண்டல் பேஸ் பேக் போடுங்கள்.வாரத்தில் இரண்டு முறை இப்படிச் செய்யலாம்.

முகத்தில் தோன்றிடும் சின்ன சின்ன மாற்றங்கள் நமக்கு வயதான தோற்றத்தை கொடுக்கிறது. இதனை தவிர்க்க. சுண்டலை வேகவைத்து மைய பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளுங்கள். அதனை தினமும் முகம் மற்றும் கைகளில் பூசி வர வேண்டும்.
இப்படிச் செய்வதனால் சருமத்திற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கப்பெறுவதுடன் எந்த விதமான அழுக்குகளும் சேராமல் சருமம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

சிலருக்கு சத்துக்குறைபாடு காரணமாக சருமத்தில் அலர்ஜி அல்லது சருமம் நிறமாறும் பிரச்சனை வரும் அவர்களுக்கு சுண்டல் சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

எட்டு கிராம் அளவுள்ள சுண்டலை தண்ணீரில் ஊற வைத்திடுங்கள் அவற்றுடன் ஒரு ஸ்பூன் திரிபலாதி பொடியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சுமார் 24 மணி நேரம் கழித்து லேசாக முளைவிட ஆரம்பிக்கும். அப்போது சுண்டலை எடுத்துச் சாப்பிட்டுவிடலாம். அந்த தண்ணீரைக் கொண்டு சருமத்தை கழுவிடுங்கள். தொடர்ந்து சில மாதங்கள் செய்தால் மட்டுமே பலன் தெரிய ஆரம்பிக்கும்.

சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவது, அழுக்குகளை நீக்குவது மட்டும் போதாது அதோடு சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும் கொடுக்க வேண்டும்.

சருமம் வறட்சியுடன் இருப்பதுவே சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு முதன்மையான காரணம். அதனால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியமாகும். சருமத்தை ஈரப்பதமாக வைத்திருப்பதில் கருப்பு சுண்டல் முக்கிய இடம் வகிக்கிறது.

கருப்பு சுண்டலை வேக வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்பேக்காக போட வேண்டும். பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம்.

சுண்டல் தலைமுடிக்கும் போதுமான போஷாக்கு தரக்கூடியது. சுண்டலில் இருக்கும் ப்ரோட்டீன் மற்றும் மக்னீசியம் தலைமுடி ஆரோக்கியமாக வளர வழிவகுக்கிறது. அதோடு நரைமுடி வராமலும் தவிர்க்க முடியும். வெறும் சுண்டலை அரைத்து ஹேர் பேக்காக போட வேண்டும்.

இளையோர் பலருக்கும் பொடுகுப் பிரச்சனை இருக்கிறது. அதனை தவிர்க்க சுண்டலை வேக வைத்து அரைத்துக்கொள்ளுங்கள் அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் ஹேர் ஹேர்ப்பேக்காக போடுங்கள். 20 நிமிடங்கள் காய்ந்ததும் கழுவி விடலாம்.

வாரம் ஒரு முறை இப்படிச் செய்வதனால் நல்ல பலன் கிடைக்கும். அதோடு தலையில் எவ்வித தொற்றும் ஏற்படாமல் பாதுகாத்திடும்.

இன்றைக்கு பெரும்பாலானோருக்கு இருக்கும் பிரச்சனை இது. முடி கொட்டுதல் இதனை சமாளிக்க முடியாமல் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்திருப்பார்கள். ஆனால் சரியான பலன் கிடைத்திருக்காது,அவர்களுக்கு சுண்டல் சிறந்த நிவாரணம் அளித்திடும்.

சுண்டல் ஹேர் பேக் போடுவதால் முடி கொட்டுவது தவிர்க்கப்படும். தலையுன் வேர்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதால் முடி உடையாமல் ஆரோக்கியத்துடன் வளரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதேன் கலந்த சுரைக்காய் சாறு குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் தெரியுமா!
Next articleவயிற்றுப் போக்கை குணப்படுத்த 7 அற்புத பாட்டி வைத்தியங்கள்!