அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன். பொது இடத்தில் ஸ்ரீதிவ்யாவிடம் காதலை சொன்ன நபர்!

0
889

அதற்கு அவர் கொடுத்த ரியாக்ஷன். பொது இடத்தில் ஸ்ரீதிவ்யாவிடம் காதலை சொன்ன நபர்!

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதிவ்யா. நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா தெலுங்கு பிறந்தவர். அதுமட்டுமில்லாமல் ஸ்ரீதிவ்யா அவர்கள் மூன்று வயதிலேயே தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் என்றும் சொல்லலாம். இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், 2010 ஆம் ஆண்டு தான் இவர் ‘மனசார’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமா திரை உலகில் அறிமுகமானார். பின் இவர் தமிழில் பென்சில், ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளைக்கார துரை, மருது என பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும்,2013 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் என்பவர் இயக்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள். இந்த படத்திற்கு இசையமைத்தவர் இமான் ஆவார். மேலும்,வசனங்கள் எழுதியவர் ராஜேஷ். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்த படத்திற்கு பிறகு தான் பல இடங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சங்கங்களை இளைஞர்கள் புதிதாக துவக்கினார்கள் என்று கூட சொல்லலாம்.

அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமான படம். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் வந்த ஒவ்வொரு பாடலும் செம்ம ஹிட் என்று சொல்லலாம். அதிலும் ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் சொன்னாலே அனைவரும் குஷி ஆகி விடுவார்கள். மேலும்,நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தார் என்று கூட சொல்லலாம். தற்போது கூட ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் எங்கு ஒலித்தாலும் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஸ்ரீதிவ்யா தான் அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் பேசும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவுகிறது. மேலும், இது குறித்து பல கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும்,வருத்தப்படாத வாலிபர் சங்கம் இசை வெளியீட்டு விழாவில் நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் பேச ஆரம்பித்த பொழுது “ஸ்ரீதிவ்யா ஐ லவ் யூ” என்று ரசிகர் ஒருவர் கூட்டத்தில் இருந்து பயங்கரமாக கத்தினார். அதற்கு ஸ்ரீதிவ்யா சிறிது நேரம் மேடையில் பேசாமலேயே சிரித்துக் கொண்டே அமைதியாக நின்றார். பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு அவர் மறுபடியும் பேச ஆரம்பித்தார். அதுமட்டும் இல்லாமல் அந்த ரசிகர் ‘ஐ லவ் யூ’ என்று சொன்னவுடன் நடிகை ஸ்ரீதிவ்யா ரியாக்சன் வீடியோவாக எடுக்கப்பட்டு இணையத்தில் வைரலாக பரவியது. இது 2013ம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோ ஆகும். ஆனாலும், பழைய வீடியோவாக இருந்தாலும் இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இது குறித்து ரசிகர்கள் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதர்ஷன் கூட இத பண்ணல! சனம் ஷெட்டியின் பிறந்தநாளுக்கு சிம்பு செய்த விஷயம்.
Next articleவிஜய் ரசிகர்களை விமர்சித்த சின்மயி! இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.