அதிர்ஷ்டசாலி ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியுமா!

0

சாமுத்திரிகா லட்சணம் பெண்களுக்கு மட்டுமில்லாமல் அதிர்ஷ்டசாலி ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்பதற்கான சில விடயங்களை பற்றி கூறுகிறது.

தலை
ஆண்களின் தலை உயர்ந்து அல்லது பருத்து இருந்தால் செல்வம் கிட்டும். தலையின் பின்பகுதி புடைத்து இருந்தால், அறிவுத்திறன் அதிகம். அதுவே தலையின் நரம்புகள் புடைத்து இருந்தால், அது தரித்திரமாம்.

நெற்றி
ஆண்களுக்கு அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருந்தால், அது ஞானம், செல்வம் இருக்கும்.

நெற்றியில் வியர்வை மற்றும் பல ரேகைகள் இருப்பின், அதிர்ஷ்டமாகும். அதுவே ரேகை இல்லையெனில் அவர்களின் ஆயுள் குறைவாம்.

கண்
ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால், அவர்கள் உலகை ஆள்வான்.

அதுவே கோழி முட்டைக் கண் அல்லது மிகச் சிறிய கண்ணாக இருப்பின் அறிவு, ஆற்றல் குறைவாக இருக்குமாம்.

மூக்கு
ஆண்களின் மூக்கு உயரமாக, நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்டதாக இருந்தால், அவர்களுக்கு பணம், பதவி, புகழ் கிட்டும்.

அதுவே மூக்கின் நுனிப் பகுதி தடித்து அல்லது நடுப்பகுதி உயர்ந்து பெரிய அளவில் இருந்தால், அது தரித்திரமாம்.

வாய்
ஆண்களின் வாய் சிறியதாக இருந்தால், அவர்கள் புத்தி, சக்தி, கருணை உள்ளவராக பெரும்பதவியில் இருப்பார்கள்.

அதுவே அகன்றும், வெளியே பிதுங்கியும், வாய் இருந்தால், அவர்கள் அதிகமாகப் பேசும் குணம் உள்ளதாகவும், பிறர் செயலில் குற்றம் காண்பவராகவும் இருப்பார்கள்.

உதடு
ஆண்களின் உதடு சிவப்பாக இருந்தால், அவர்களுக்கு அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷடம் ஆகியவை நிலைத்திருக்கும்.

அதுவே கருத்து, உலர்ந்து, தடித்தது போன்று உதடு இருந்தால், அவர்களிடம் கபடம் நிறைந்திருக்கும்.

கழுத்து
ஆண்களின் கழுத்து பருத்தும், உயரம் உடையதாகவும் இருந்தால், அவர்கள் அதிர்ஷ்டசாலி. அதுவே கழுத்து மிக உயரமாக அல்லது மிக குட்டையாக நரம்புகள் வெளியில் தெரியும் படி இருந்தால், அவர்கள் வறுமையில் வாடுபவராக இருப்பார்கள்.

தோள்
ஆண்களின் தோள்கள் இரண்டும் உயர்ந்ததாக இருப்பின், அவர்களுக்கு செல்வம் நிறைந்திருக்கும்.

அதுவே தோள் தாழ்வாக இருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு. கழுத்து சமமாக அல்லது அதிக முடி இருந்தால், அவர்களுக்கு அறிவுத்திறன் அதிகமாக இருக்கும்.

நாக்கு
ஆண்களின் நாக்கு நீளமாக இருந்தால், அவர்கள் சிறந்த பேச்சாளர்களாக விளங்குவார்கள். நாக்கின் நுனியில் கருப்புப் புள்ளிகள் இருந்தால், அவர்களின் வாக்கு பலிக்கும்.

அதுவே நாக்கு சிவந்து இருந்தால் அதிர்ஷ்டம். கருத்து, வெளுத்து, உலர்ந்து இருப்பின், அது தரித்திரமாம்.

பல்
ஆண்களுக்கு மெல்லிய ஒடுக்கமான பற்கள் இருந்தால், அவர்கள் சிறந்த கல்விமானாக இருப்பார்கள். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். அதுவே வரிசை தவறி, ஒன்றுக்கு மேல் ஒன்று இருந்தால், அது தரித்திரமாம்.

காது
ஆண்களின் காதின் மேல் செவி அகலமாக இருந்தால், முன் கோபம் வரும். அதுவே காது குறுகி இருந்தால், அது அதிர்ஷ்டமாம்.

கைகள்
ஆண்களுக்கு நீளமான, சீரான பருமன் உடைய கைகள் இருந்தால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முழங்கால் வரை கை நீளமாக இருந்தால், அவர்கள் அரசன் ஆவான்.

தடித்த, குட்டையான கைகள் உள்ள ஆண்களை நம்பக் கூடாது. கைகள் ஒன்றுக் கொன்று வித்தியாசமாக இருந்தால், அவர்கள் பாவியாக இருப்பர். அதுவே கைகளில் நீண்ட ரோமங்கள் இருந்தால், அவர்கள் செல்வந்தர் ஆவார்கள்.

மணிக்கட்டு
ஆண்களின் மணிக்கட்டில் உள்ள சதை கெட்டியாக இருந்தால், அவர்களுக்கு அரசு பதவி கிட்டும். மணிக்கட்டு உயரமாக இருந்தால், அவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டு.

அதுவே மணிக்கட்டுகள் ஸ்திரமின்றி இருந்தாலும், மடக்கும் போது சப்தம் வந்தாலும் அது தரித்திரமாம்.

கை விரல்கள்
ஆண்களின் கை விரல்கள் நீளமாக இருந்தால், அவர்களுக்கு கலை ஆர்வம், காம இச்சை அதிகமாக இருக்கும். விரல்களுக்கு இடையே இடைவெளி இருந்தால் அது தரித்திரம்.

மார்பு
ஆண்களின் மார்பு விசாலமாக, சதைப் பிடிப்போடு இருந்தால், அவர்கள் புகழ் பெற்று விளங்குவார்கள். அதுவே கோணலாக, ஒன்றோடொன்று நெருங்கி, உரோமம் இல்லாமல் இருந்தால், அவர்களுக்கு இச்சை அதிகம் இருக்கும்.

வயிறு
ஆண்களுக்கு பானை போன்ற உருண்டையான வயிறு இருந்தால், செல்வம் அதிகமாகும். வயிறு தொங்கினால் மந்த நிலை உண்டாகும்.

அதுவே ஒட்டிய வயிறு போன்று இருந்தால், அவர்கள் குபேரனாய் இருப்பார்கள். ஆண்களின் வயிற்றில் மடிப்புகள் இல்லாமல் இருப்பதே உத்தமம்.

முதுகு
ஆண்களுக்கு முதுகு சமமாக இருந்தால், அவர்கள் எதிலும் வெற்றி பெறுவார்கள். அதுவே முதுகில் எலும்புகள் காணப்பட்டால், அது தரித்திரமாம்.

கால்கள்
ஆண்களின் கால்கள் நீளமாக இருந்தால் அரசாங்க விருதுகள் பெறுவார்கள். குட்டையாக இருப்பின் தரித்திரமாம்.அதுவே முழங்காலுக்கு மேல் உயரமாகவும், கீழே குட்டையாகவும் இருந்தால், அவர்களுக்கு நன்மைகள் பெருகும்.

கால்பாதம்
ஆண்களின் கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின், புகழ் உண்டாகும். பாதங்களில் மேடு பள்ளமாக, நகங்கள் கோணல் மாணலாக, விரல்கள் தனித்தனியே விலகி இருந்தாலும் அவர்கள் அதிக வறுமையில் வாடுவார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த பொருளை மட்டும் பிறந்த திகதியின் படி வீட்டில் வையுங்கள்!
Next articleஉடல் எடையை ஈஸியா குறைக்க தினமும் இதை மட்டும் சாப்பிடுங்க!