அண்டை வீட்டாருடன் நெருங்கி பழகிய மனைவி! கணவர் எடுத்த முடிவால் உயிருக்கு போராடி வரும் பரிதாபம்!

0
401

தமிழகத்தில் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையத்தில் கணவர் புகார் அளித்ததால், மனமுடைந்த மனைவி தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தண்டுபாளையம் காலனியைச் சேர்ந்த தம்பதி அருள்தாஸ்-தமிழ்ச்செல்வி.

இதில் தமிழ்ச்செல்வி அண்டை வீட்டக்காரரான செல்வகுமார் என்பவருடன் நெருங்கிய பழகியதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த அருள்தாஸ் தன்னுடைய மனைவியை பல முறை எச்சரித்த போதும், அவர் கேட்காததால், சந்தேகமடைந்து அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த தமிழ்ச்செல்வி காவல்நிலையம் அருகேயுள்ள பாழடைந்த மருத்துவமனையில் தீக்குளித்தார்.

95 சதவிகித தீக்காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: