அடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள்? நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி! தல அஜித் இப்படிப்பட்டவரா?

0
390

தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவில் அடுத்து நடிகர்களின் பெயரை வெளியிட்டு வருகிறார். அதன்படி அவர் வெளியிட்ட பட்டியலில் இயக்குநர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஒரு சிலரின் பெயர்கள் இடம்பெற்றன.

இதையடுத்து தன் பெயரை நடிகை ஸ்ரீரெட்டி பயன்படுத்தியதால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்திருந்தார். அடுத்து அவரது பட்டியலில் நடிகர் ஆதி இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ஸ்ரீ ரெட்டி முகநூல் பதிவில், நடிகர் சங்கத் தலைவர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறினார்.

ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்திருந்தார். சமீபத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் தான் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறியிருந்தார்.

தற்போது பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள போட்டியில், விஷாலிடம் தன்னை மன்னித்து விடுமாறு கேட்டுள்ளார்.

இதேவேளை, தல அஜீத்தை மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அது மட்டும் இல்லை நடிகை சாலினி மிகவும் அதிஷ்டசாலி என்றும் கூறியுள்ளார். மேலும், நடிகை சாலினி, அஜீதை பார்த்து பொறாமை படுவதாகவும் கூறியுள்ளார்.

நடிகர்களில் தல அஜித் அவரை பற்றி நிறைய நல்ல விஷயங்கள் கேள்விப்பட்டதாகவும், அவர் மிகவும் கன்னியமானவர் என்றும் தெரிவித்திருக்கிறார். இதனால் தல அஜித் ரசிகர்கள் பெருமையோடு இருக்கிறார்கள்.

மேலும், தமிழ்சினிமாவில் தனக்கு பிடித்தவர்களின் பட்டியலை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, இயக்குநர்களில் கார்த்திக் சுப்புராஜ், வசந்த பாலன், அட்லி, எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் ஆகியோரை குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: