வயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்படுவதன் காரணம் தெரியுமா!

0
7393

உங்களுக்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் கடுமையான வலி ஏற்படுகிறதா? ஆம் என்றால், அதை சாதாரணமாக விட்டுவிடாமல், உடனே அதற்கான காரணத்தை மருத்துவரிடம் சென்று தெரிந்து கொள்ளுங்கள்.

ஏனெனில் இது குறிப்பிட்ட நோய்களுக்கான அறிகுறியாகும். ஆரம்பத்திலேயே அதைக் கவனித்து, சிகிச்சைப் பெற்று வந்தால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். அடிவயிற்றின் இடது பக்கத்தில் எந்த பிரச்சனைகள் இருந்தால் வலியை சந்திக்க நேரிடும் என கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

சிறுநீர் பாதை தொற்றுசிறுநீர் பாதையில் தொற்றுகள் இருந்தால், அடிவயிற்றின் இடது பக்கமாக வலியை சந்திக்க நேரிடும்.

சிறுநீர்ப்பை அழற்சிஅடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் சிறுநீர்ப்பை அழற்சி ஆகும். இந்த நிலை ஒருவருக்கு இருந்தால், அடிவயிற்று வலியுடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கவும் நேரிடும்.மலச்சிக்கல்மலச்சிக்கலுடன், வயிற்றில் வாய்வு அதிகமாக தேங்கி அசௌகரியத்தை உணர்ந்தால், அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்படும்.

எரிச்சல் கொண்ட குடல் நோய்குடலில் அழற்சி இருந்து, அசாதாரண இடைவெளியில் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், எரிச்சல் கொண்ட குடல் நோய் உள்ளது என்று அர்த்தம். இந்நோய் இருந்தால், அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலிக்கும்.

கிரோன் நோய்கிரோன் நோயின் முக்கிய அறிகுறியே அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலிப்பது தான். இது செரிமான பாதைகளில் ஏற்படும் ஒரு அழற்சி நோயாகும்.

சிறுநீரக கற்கள்சிறுநீரக கற்கள் இருந்தால், இடுப்பு மற்றும் அடிவயிற்றின் இடது பக்கத்தில் கடுமையான வலியை உணரக்கூடும்.எக்டோபிக்/இடம் மாறிய கர்ப்பம்திருமணமாகி கருத்தரித்த பெண்களுக்கு அடிவயிற்றின் இடது பக்கத்தில் வலி ஏற்பட்டால், சிசு கருப்பையினுள் வளராமல், இடது பாலோப்பியன் குழாயினுள் வளர்கிறது என்று அர்த்தம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: