அகால மரணம், சூன்ய மரணம் ஆகியவற்றை களைந்தெறிய தன்வந்திரி திரயோதசி விரதம் !

0

அகால மரணம், சூன்ய மரணம் ஆகியவற்றை களைந்தெறியவே ‘தன்தேரஸ்’ என்னும் விழா உருவாக்கப்பட்டு தன்வந்திரி திரயோதசி விரதம் கடைபிடிக்கப்பட்டது.

ஆரோக்கிய வாழ்வு தரும் தன்வந்திரி திரயோதசி விரதம்

தீபாவளி அமாவாசைக்கு முன்தினம் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது ஒரு கையில் அமிர்தகலசம் மற்றொரு கையில் மருத்துவ சாஸ்திரம் மற்றும் அதன் வழிமுறைகளோடு கூடிய ஓலைச் சுவடிகளோடு தன்வந்திரி வெளிவந்தார்.

ஆயுர்வேத சாஸ்திர முறைகளை உலகுக்கு உபதேசிக்க வந்த இவரை உலக மருத்துவர்கள் மானசீகக் குருவாகவும் கடவுளாகவும் வணங்குகின்றனர்.

மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டகம், குதிரை, யானை, பசுக்கள் மற்றும் தாவர இனங்களுக்கும் மருத்துவம் செய்யும் முறைகளை தன்வந்திரியும் அவரது வம்சாவழியினரும் கையாண்டனர்.

மருத்துவக் கடவுள் எனப்படும் தன்வந்திரியின் கருத்துப்படி இந்த உலகில் 121 வகையான மரணங்களும், ஆயிரத்து நூற்று முப்பதிரண்டு நோய்களும் ஏற்படுகின்றன. அவற்றில் அகால மரணம், சூன்ய மரணம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதைக் களைந்தெறியவே ‘தன்தேரஸ்’ என்னும் விழா உருவாக்கப்பட்டு தன்வந்திரி திரயோதசி விரதம் கடைபிடிக்கப்பட்டது.

துலாமாசம் என்ற ஐப்பசியில் தங்கள் நோய்களைப் போக்க புனித தீர்த்தக் கட்டங்களுக்குச் சென்று ஸ்நானம் என்கின்ற புனித நீராடல் செய்யும்போது அங்குள்ள தெய்வங்களும் தீர்த்தம் அருள்வதைக் கண்டு தரிசிக்கிறோம்.

தன்வந்திரி திரயோதசி விரதம் மகிமை

“ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்பாக வரும் தேய்பிறை திரயோதசி அன்று தன்வந்தரி பகவானைக் குறித்து விரதமிருந்து முறையாக வழிபட்டு பூஜை செய்து வீட்டில் தீபங்கள் ஏற்றிய பின் புனித தீர்த்தங்கள் நீர்நிலைகளுக்குச் சென்று தீபம் ஏற்றிவிட்டு தீப தானம், வஸ்திர தானம் செய்தாலும் யமனைக் குறித்து துதிக்கப்படுகிற யமாஷ்டகத் துதி படிப்பதாலும் துர்மரணங்களிலிருந்து மீண்டு தீர்க்கமான ஆயுளைப் பெறமுடியும்” என்று யமதர்மராஜா கூறியுள்ளார்.

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான வைத்தியநாதசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் சுவாமி தையல்நாயகிஅம்மனுடன் அருள்பாலிக்கிறார். இங்கு செல்வமுத்துக்குமாரசுவாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் மற்றும் தன்வந்திரிசித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயிலில் தன்வந்திரி சித்தர் உருவாக்கிய சித்தாமிர்த தீர்த்தகுளம் உள்ளது.இக்குளத்தில் நீராடி வைத்தியநாதசுவாமி பிரசாதமான தீர்த்த மண் உருண்டையை ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் 4ஆயிரத்து448 வியாதிகள் தீரும் என்பது ஐதீகம். துனி சன்னதியில் அருள்பாலிக்கும் தன்வந்திரி சித்தரை முறைப்படி தன்வந்திர் ஸ்லோகத்தினை பாராயணம் செய்து வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியம் கைக்கூடும். மேலும் தன்வந்திரி யாகம் செய்து வழிபாடு செய்தால் அனைத்து வித ராஜயோகத்தினை அடையலாம். தனம், வற்றாதசெல்வம், வற்றாதபுகழ் பெற தன்வந்திரி வழிபாடு பக்தர்கள் செய்யலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபித்ரு வழிபாடு பற்றி ஒரு சில உங்களுக்கு தெரியாத‌ தகவல்க‌ள் !
Next articleToday Rasi Palan இன்றைய ராசிப்பலன் – 26.10.2019 சனிக்கிழமை !