வி(சாரணை)யில் வெளியான உண்மை! வயிற்றில் குழந்தையுடன் சி(று)மி!
திருமண ஆசைவார்த்தை கூறி சிறுமியை வ(ன்பு)ணர்வு செய்த வாலிபருக்கு ஆயுள் த(ண்ட)னை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கோவை போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மேட்டுப்பாளையம் மாதையான் லே- அவுட் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார்(24). அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வரும் இவருக்கு திருமணமாகி மனைவியும் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் 2வது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வ(ன்புண)ர்வில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சிறுமி கர்ப்பமடைந்ததையடுத்து, பெற்றோருக்கு விடயம் தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள் துடியலூர் அனைத்து மகளிர் பொலிசில் புகார் செய்துள்ளனர். உடனே பொலிசார் வழக்குப்பதிவு செய்து மெக்கானிக் விஜயகுமாரை கைது செய்தனர். இது குறித்தான வழக்கு கோவை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார். அதில் திருமண ஆசைவார்த்தை கூறி சிறுமியை ப(லாத்கா)ரம் செய்த விஜயகுமாருக்கு ஆயுள்(தண்ட)னை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.