சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்கார்கள் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள்.
ஜோதிடத்தின் படி, சனி பகவான் தற்போது திருவோணம் நட்சத்திரத்தில் இருக்கிறார். 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி திருவோணம் நட்சத்திரத்திற்கு சென்றார்.
இந்த நட்சித்திரத்தில் 2022 பிப்ரவரி மாதம் 18 ஆம் திகதி வரை இருப்பார். அதன் பின்னர் அவிட்டம் நட்சத்திரத்திற்கு மாறி பயணிக்க தொடங்குவார்.
இந்த அவிட்ட நட்சத்திரத்தில் சனி பகவான் 2023 மார்ச் 15 ஆம் திகதி வரை பயணிக்கும் சனி பகவானால் 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலனைப் பெறப் போகிறார்கள். தற்போது அந்த ராசிக்காரர்கள் யார் என பார்ப்போம்.
மேஷம்
அவிட்டம் செல்லும் சனிபகவானால் மேஷ ராசிக்காரர்கள் நன்மைகளைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். பணியிடத்தில் வேலைகள் அனைத்தும் முழுமையாக முடிக்கப்படும்.
பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது. ஒவ்வொரு வேலையிலும் உங்கள் குடும்பத்தாரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். புதிய வேலைக்கான நல்ல வாய்ப்புக்களும் வரக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களும் சனியின் நட்சத்திர மாற்றத்தால் நன்மைகளைப் பெறப் போகிறார்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது.
ஒன்றிற்கு மேற்பட்ட ஊடகங்களில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். வேலை விஷயமாக மேற்கொள்ளும் பயணங்களால் பண ஆதாயம் உள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் பல நன்மைகளைப் பெறவுள்ளார்கள். இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். மன உளைச்சல் குறையும்.
தொழிலில் நல்ல வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணம் இனிமையாக இருக்கும். நிதி நிலைமை வலுவாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சனியின் நட்சத்திர பெயர்ச்சி நல்ல பலனைத் தரும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். பணியிடத்தில் பல நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவீர்கள்.
புதிய தொழில் தொடங்குவது பற்றி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் எந்த ஒப்பந்தத்திலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.