யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த இளைஞர் நேற்றைய தினம் சுவிட்சர்லாந்தில் வைத்து பாதசாரிகள் நடப்பதற்கான மஞ்சள் கோட்டில் செல்லும்போது விபத்திற்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் தற்போது வசிக்கும் குறித்த 31 வயது மதிக்கத் தக்க இளைஞன் இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
நேற்று அதிகாலை இவர் பாதசாரிகள் கடவையை கடக்க முற்பட்ட வேளை கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: