இன்று 25-11-2021 கார்த்திகை மாதம் 09ம் நாள் வியாழக்கிழமை ஆகும். சஷ்டி திதி பின்இரவு 04.42 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூசம் நட்சத்திரம் மாலை 06.49 வரை பின்பு ஆயில்யம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். இன்று முருக வழிபாடு செய்வது நல்லது. இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள் ஆகும்.
இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷம் ராசிபலன்: இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் செய்ய கூடிய சூழ்நிலை ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவது நல்லது. வேலையில் உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம் ராசிபலன்: இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.
மிதுனம் ராசிபலன்: இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் தாமதநிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் ஓரளவு குறையும். உறவினர்கள் உதவியால் பணகஷ்டம் நீங்கும்.
கடகம் ராசிபலன்: இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலனை தரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். நவீன பொருட்களை வாங்குவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.
சிம்மம் ராசிபலன்: இன்று உங்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். எளிதில் முடிய கூடிய செயல்கள் கூட தாமதமாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.
கன்னி ராசிபலன்: இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நினைத்தது நடக்கும்.
துலாம் ராசிபலன்: இன்று வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான சிக்கல்களில் அனுகூலப்பலன் கிட்டும். உறவினர்கள் வழியாக மனமகிழும் செய்திகள் வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.
விருச்சிகம் ராசிபலன்: இன்று உங்களுக்கு உடலில் சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். கடன்கள் குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
தனுசு ராசிபலன்: இன்று உங்களுக்கு தேவையில்லாத மனஉளைச்சல் உண்டாகலாம். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. வேலையில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது உத்தமம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை.
மகரம் ராசிபலன்: இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். புத்திர வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.
கும்பம் ராசிபலன்: இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஒரு சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வருமானம் பெருகும்.
மீனம் ராசிபலன்: இன்று உறவினர்களுடன் ஏற்படும் வாக்குவாதங்களால் மன நிம்மதி குறையும். குடும்பத்தில் செலவுகள் வரவுக்கு மீறி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வேலையில் புதிய நபர்களால் அனுகூலம் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.