19-07-2021, ஆடி 03, திங்கட்கிழமை, தசமி திதி இரவு 10.00 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. விசாகம் நட்சத்திரம் இரவு 10.27 வரை பின்பு அனுஷம். மரணயோகம் இரவு 10.27 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்: காலை 07.30 -09.00, எம கண்டம்: 10.30 – 12.00, குளிகன்: மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்: மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷம்: இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு பிற்பகல் 04.53 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
ரிஷபம்: இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்: இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும்.
கடகம்: இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தைகள் அனுகூலப் பலனை தரும்.
சிம்மம்: இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் கல்வி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். திடீர் பண வரவு ஏற்படும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும்.
கன்னி: இன்று எதிர்பாராத செலவுகளால் பணநெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். எடுத்த காரியம் வெற்றி பெற சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பெற்றோரின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
துலாம்: இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.
விருச்சிகம்: இன்று குடும்பத்தில் அமைதி குறையும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சினை தீரும்.
தனுசு: இன்று பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். எதிர்பாராத பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும்.
மகரம்: இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் புதிய முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். வியாபார ரீதியாக கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும்.
கும்பம்: இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும்.
மீனம்: இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பிற்பகல் 4.53 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். நிதானமாக செயல்பட்டால் தொழிலில் உள்ள சிக்கல்கள் குறையும்.