இன்றைய ராசிபலன் 12.10.2022 Today Rasi Palan 12-10-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!

0

அக்டோபர் 12ஆம் தேதி புதன்கிழமை மாலை வரை மேஷ ராசியிலும், மாலைக்கு பிறகு சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் சந்திரன் சஞ்சரிப்பார். அப்படிப்பட்ட நிலையில் சந்திரன் உச்சம் பெற்று செவ்வாயுடன் சேர்ந்து தன யோகமும் உண்டாகும். இதனால் பல ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமாக இருக்கும். குறிப்பாக வியாபாரத்தில் அனுகூலமாக இருக்கும். சந்திர மங்கள யோக பலன் கிடைக்கும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு: இன்று உங்களின் சிறந்த ஆளுமை மற்றும் திறன் வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். இடம் மாற்றம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக வாய்ப்புள்ளது. இளைஞர்கள் தங்கள் தொழிலில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள்.

சில நேரங்களில் சோம்பல் உங்கள் முக்கியமான வேலைகளை தாமதப்படுத்தலாம், என்பதால் சுறுசுறுப்பு தேவை. இன்று யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். சிலருடன் சேர்ந்து செய்யும் வேலைகளில் அனுகூலமான சூழ்நிலை உண்டாகும். திருமண வாழ்க்கை அல்லது காதல் விவகாரத்தில் சச்சரவுகள் வரலாம். ஒவ்வாமை தொந்தரவு ஏற்படலாம்.

ரிஷப‌ ராசிக்காரர்களுக்கு: இன்று குடும்பம் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் நல்ல சமநிலையைப் பேணுவீர்கள். இந்த நேரத்தில் பொருளாதார லாபமும் கிடைக்கும். முழு முயற்சியுடன் உங்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். சொத்து சம்பந்தமான எந்த வேலையையும் தவிர்ப்பது நல்லது.

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன், அதை முழுமையாக படிக்கவும். ஒருவருக்கு கடன் கொடுப்பதற்கு முன், அதைத் திருப்பிச் செலுத்துவதற்கான தேதியை நிர்ணயிக்கவும். கூட்டுத் தொழிலில் நீண்ட நாட்களாக இருந்து வந்த நெருக்கடிகள் இன்று நீங்கும். உங்கள் நடவடிக்கைகளில் வாழ்க்கைத் துணையின் முழு ஒத்துழைப்பு கவலையைக் குறைக்கும். கடந்த சில நாட்களாக இருந்து வந்த உடல் பிரச்சனைகள் நீங்கும். அழகு, ஃபேஷன் மற்றும் உணவு மற்றும் பழங்கள் மற்றும் காய்கறிகள் வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இன்று நிறைய நன்மைகளைப் பெறுவார்கள்.

மிதுன‌ ராசிக்காரர்களுக்கு: வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்கும். தகவல்கள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. மற்றபடி கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும்.

காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகள் உண்டு. புதிய வாகன வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவர்களால் சட்டம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பணிச்சுமை மற்றும் அழுத்தம் கூடுதலாக இருந்தாலும் உங்கள் திறமையை நிர்வாகத்திற்கு புரிய வைக்கும் நல்ல நாள் ஆகும்.

கடக‌ ராசிக்காரர்களுக்கு: நண்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். தொழில் மற்றும் உத்தியோகம் சம்பந்தமாக நீங்கள் எடுத்து வைக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருந்தால் இவைகளில் நல்ல நிகழ்வுகள் இன்று உண்டாகும். தாய் நாடுகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருந்து வரும்.

சிம்ம‌ ராசிக்காரர்களுக்கு: காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு சந்தோஷமான சந்திப்புகளும் உண்டு. உங்கள் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் பேசுவதற்கு இன்று உகந்த நாள் மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல நாள் ஆகும்.

புதிய வேலைவாய்ப்புகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேர வாய்ப்பு உள்ளது கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி தருவதாக அமையும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு: வயதானவர்களுக்கு உடல் ரீதியான தொல்லைகள் சிறிய அளவில் ஏற்பட்டு விலகும் குழந்தைகளைப் பற்றிய அல்லது அவர்களுடைய எதிர்காலத்தை பற்றிய கவலைகள் மனதை ஆட்கொள்ளும். ஆயினும் அவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டு

இருப்பினும் சற்று கடின முயற்சி தேவைப்படும். கணவன் மனைவி ஒற்றுமை சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் நல்ல முறையில் செல்லும் திருமணம் போன்ற சுபகாரிய செயல்கள் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு என்பதால் நிதானத்தை கடைபிடிக்கவும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு: நண்பர்களுக்கு இந்த நாள் நல்லநாள் ஆகும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் ஒரு சிலருக்கு கடன் பெற்று சொத்துக்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். சுபச் செலவுகள் உங்களை தேடி வரும் குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

கணவன் மனைவி உறவு அன்னியோனியமாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு என்றாலும் இவைகள் வெற்றியில் முடியும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் செலவும் அலைச்சலும் உண்டாக வாய்ப்பு உள்ளது.

விருச்சிக‌ ராசிக்காரர்களுக்கு: நண்பர்களுக்கு இன்றைய நாள் பல நல்ல பலன்களை கொடுக்கும். திருப்தியான நாள் ஆகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை எல்லாம் உங்களுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமும் உண்டாகும் பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண் முன் வந்து நிற்கும். அவைகளை சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்கள் தொழில் முன்னேற்ற பாதையை நோக்கி சென்று விடும் பெண்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு: நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். உத்தியோகம் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தகவல்கள் வந்து சேரும் வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்கள் என்று தங்கள் முயற்சிகளை துவக்கலாம்.

குடும்பத்தில் அமைதி தவழும் மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடைய கூடிய நாளாகும். பொருளாதாரப் பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளித்து வெற்றி அடைவீர்கள் அரசியல் துறையில் உள்ளவர்கள் வெற்றி காண்பார்கள்.

மகர‌ ராசிக்காரர்களுக்கு: குழந்தைகளால் உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு சில நிகழ்வுகள் ஏற்படலாம். படலாம் என்பதால் சொல்லிலும் செயலிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடுகள் வந்து விலகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன நிம்மதி பெறுவார்கள் புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வேலை மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும் வாய்ப்பு உண்டு.

கும்பம் ராசிக்காரர்களுக்கு: அன்பர்களுக்கு உங்கள் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். உங்கள் சொல்லும் செயலும் உங்களுக்கு எதிராக மாற வாய்ப்புண்டு என்பதால் பொறுமையாக இருப்பது அவசியம் குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் ஒத்துப் போவதில் சட்ட சிக்கல்கள் வந்து நீங்கும்

சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்கள் அவைகளிலிருந்து எளிதில் வெளிவந்துவிடும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்துவரும். குடும்பத்திலுள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

மீனம் ராசிக்காரர்களுக்கு: கணவன் மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருந்து வரும். மாணவர்களின் கல்வி மேம்படும் சொந்தத் தொழில் செய்பவர்கள் . முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள் முயற்சிகள் லாபம் தருவதாக அமையும்.

கலைத்துறை பத்திரிக்கைத்துறை மற்றும் சுற்றுலா துறையில் இருப்பவர்கள் பணிச்சுமை சற்று அதிகமாக இருந்தாலும் வருமானத்தை தருவதாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் உண்டாகும் மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 14
Next articleநம் வீட்டில் உள்ள மருத்துவ குணம் கொண்ட பொருட்கள்!