இன்றைய ராசி பலன் 08.11.2021 Today Rasi Palan 08-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்றைய ராசிப்பலன் 08.11.2021

இன்று 08-11-2021 ஐப்பசி மாதம் 22ம் நாள் திங்கட்கிழமை ஆகும். சதுர்த்தி திதி பகல் 01.17 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. மூலம் நட்சத்திரம் மாலை 06.49 வரை பின்பு பூராடம். சித்தயோகம் மாலை 06.49 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி. இன்று விநாகர் வழிபாடு செய்வது நல்லது. இன்று சுபமுகூர்த்த நாள். இன்று சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்: காலை 07.30 -09.00, எம கண்டம்: 10.30 – 12.00, குளிகன்: மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்: மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷம் ராசிக்காரர்களே: இன்று உறவினர்களால் வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படலாம். பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொண்டால் உயர்வு கிட்டும்.

ரிஷபம் ராசிக்காரர்களே: இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

மிதுனம் ராசிக்காரர்களே: இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். கணவன் மனைவிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம் ராசிக்காரர்களே: இன்று வியாபாரத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். வருமானம் பெருகும்.

சிம்மம் ராசிக்காரர்களே: இன்று உற்றார் உறவினர்களால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். வீட்டு தேவைகள் பூர்த்தி செய்வதில் கூட சற்று சிரமம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபார ரீதியான பிரச்சினைகள் குறையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

கன்னி ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு திடீர் செலவுகள் உண்டாகும். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்தல் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

துலாம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதன் மூலம் லாபம் பெருகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

விருச்சிகம் ராசிக்காரர்களே: இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் உண்டாகும். திருமண சுபமுயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். கடன் பிரச்சினை தீரும்.

தனுசு ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினை குறைந்து மன அமைதி உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும். வேலையில் உடனிருப்பவர்களால் அனுகூலப் பலன் கிட்டும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு உதவும். நண்பர்கள் ஆறுதலாக இருப்பார்கள்.

மகரம் ராசிக்காரர்களே: இன்று நீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். பணப் பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் கவனம் தேவை. உங்களின் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

கும்பம் ராசிக்காரர்களே: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் பாசத்துடன் இருப்பார்கள். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். வராத கடன்கள் வசூலாகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

மீனம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் புதிய முயற்சியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபார ரீதியாக கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசீமெந்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! வெளியானது புதிய‌ அறிவிப்பு!
Next articleஇன்றைய ராசி பலன் 09.11.2021 Today Rasi Palan 09-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!