இன்றைய ராசி பலன் 08.04.2021 Today Rasi Palan 08-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!

0

இன்று 08-04-2021 பங்குனி மாதம் 26ம் நாள் வியாழக்கிழமை ஆகும். துவாதசி பின்இரவு 03.16 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. இன்று சதயம் நட்சத்திரம் பின் இரவு 04.57 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் பின் இரவு 04.57 வரை பின்பு சித்தயோகம் காணப்படும். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. இன்று புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்: மதியம் 01.30-03.00, எம கண்டம்: காலை 06.00-07.30, குளிகன்: காலை 09.00-10.30, சுப ஹோரைகள்: காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.

மேஷம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு அதிகாலையிலே ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். கடினமான காரியங்களை கூட எளிதில் செய்து முடித்து அனைவரின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலப் பலன் உண்டாகும்.

மிதுனம் ராசிக்காரர்களே: இன்று உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்பட்டாலும் சுப செய்தி கிட்டும்.

கடகம் ராசிக்காரர்களே: இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும். தேவையற்ற பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடப்பதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

சிம்மம் ராசிக்காரர்களே: இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்களே: இன்று நீங்கள் குடும்பத்தினரின் உதவியுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வண்டி வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் நிறைவேறும்.

துலாம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். எதிலும் சிக்கனம் தேவை.

விருச்சிகம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மனநிம்மதி குறையும். தூர பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் அனு-கூலமான பலன் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.

தனுசு ராசிக்காரர்களே: இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உறவினர்கள் வழியாக சுப செய்திகள் தேடி வரும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் இன்று கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் நிறைவேறும்.

மகரம் ராசிக்காரர்களே: இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடியால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

கும்பம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை ஏற்படும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

மீனம் ராசிக்காரர்களே: இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். அரசியல் பிரமுகர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 07.04.2021 Today Rasi Palan 07-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 09.04.2021 Today Rasi Palan 09-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!