Thirukkural Kaalam Arithal Adhikaram-49 திருக்குறள் காலமறிதல் அதிகாரம்-49 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil

0

Thirukkural Kaalam Arithal Adhikaram-49 (Kaalamarithal) திருக்குறள் காலமறிதல் அதிகாரம்-49 அரசியல் பொருட்பால் Thirukkural Kaalam Arithal Adhikaram-49 Arasiyal Porutpal in Tamil. திருக்குறள் காலமறிதல் பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-49 அரசியல் பொருட்பால். காலமறிதல் Kaalam Arithal Thirukkural by Thiruvalluvar. Thirukkural Kaalam Arithal Chapter-49. காலம் அறிதல் அதிகாரம் 49.

Thirukkural Kaalam Arithal Adhikaram-49

Thirukkural Kaalam Arithal Adhikaram-49

திருக்குறள் பா: 481
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

kural 481: pakalvellum kookaiyaik kaakkai ikalvellum vendharkku ventum pozhudhu

திரு மு.வரதராசனார் பொருள்:
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

மணக்குடவர் பொருள்:
இராப்பொழுது வெல்லுங் கூகையைக் காக்கை பகற்பொழுது வெல்லும். ஆதலான் மாறுபாட்டை வெல்லும் அரசர்க்குக் காலம் வேண்டும் இது காலமறிதல் வேண்டும் என்றது.

கலைஞர் பொருள்:
பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்று விடும். எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
தன்னைவிடப் பலமுள்ள கோட்டானைக் காக்கை பகலில் வென்றுவிடும்; ஆகவே பகைவரை வெல்ல எண்ணுபவர்க்கு அதற்கு ஏற்ற காலம் அவசியம்.

திருக்குறள் பா: 482
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.

kural 482: paruvaththotu otta ozhukal thiruvinaith theeraamai aarkkung kayiru

திரு மு.வரதராசனார் பொருள்:
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.

மணக்குடவர் பொருள்:
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் – காலத்தொடு பொருந்த அரசன் வினைசெய்தொழுகுதல் ; திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு – நிலையில்லாத செல்வத்தைத் தன்னிடத்தினின்று நீங்காவண்ணங் கட்டிவைக்கும் கயிறாம் . காலத்தொடு பொருந்துதல் காலந்தவறாமற் செய்தல் . ‘தீராமை ‘என்றதனால் தீருந்தன்மைய தென்பது பெறப்படும் . வினைகள் தொடர்ந்து வெற்றியாய் முடிதலால் செல்வம் ஒரு போதும் நீங்கா தென்பது கருத்து .

கலைஞர் பொருள்:
காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.

திருக்குறள் பா: 483
அருவினை யென்ப உளவோ கருவியான்
கால மறிந்து செயின்.

kural 483: aruvinai yenpa ulavo karuviyaan kaalam arindhu seyin

திரு மு.வரதராசனார் பொருள்:
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

மணக்குடவர் பொருள்:
அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.

கலைஞர் பொருள்:
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.

சாலமன் பாப்பையா பொருள்:
செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.

திருக்குறள் பா: 484
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.

kural 484: gnaalam karudhinung kaikootung kaalam karudhi itaththaar seyin

திரு மு.வரதராசனார் பொருள்:
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

மணக்குடவர் பொருள்:
உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின். இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது.

கலைஞர் பொருள்:
உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

திருக்குறள் பா: 485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

kural 485: kaalam karudhi iruppar kalangaadhu gnaalam karudhu pavar

திரு மு.வரதராசனார் பொருள்:
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்

மணக்குடவர் பொருள்:
செய்யுங்காலம் வருமளவு நினைத்து அசைவின்றி யிருப்பார்: ஞாலத்தைக் கொள்ளக் கருதுபவர்.

கலைஞர் பொருள்:
கலக்கத்துக்கு இடம் தராமல் உரிய காலத்தை எதிர்பார்த்துப் பொறுமையாக இருப்பவர்கள் இந்த உலகத்தையேகூட வென்று காட்டுவார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்:
பூவுலகம் முழுவதும் வேண்டும் என்போர், ஏற்ற காலத்தை எண்ணித் தவறாமல் காத்து இருப்பர்.

திருக்குறள் பா: 486
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.

kural 486: ookka mutaiyaan otukkam porudhakar thaakkarkup perun thakaiththu

திரு மு.வரதராசனார் பொருள்:
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.

மணக்குடவர் பொருள்:
மன மிகுதி யுடையவன் காலவரவு பார்த்து ஒடுங்குதல், போரைக் கருதின தகர் வலிபெறத் தாக்குதற் பொருட்டுப் பெயர்ந்தாற் போலும். இது காலம் வருமளவுங் குறைத்தால் வலி மிகுமென்றது.

கலைஞர் பொருள்:
கொடுமைகளைக் கண்டும்கூட உறுதி படைத்தவர்கள் அமைதியாக இருப்பது அச்சத்தினால் அல்ல; அது ஆட்டுக்கடா ஒன்று தனது பகையைத் தாக்குவதற்குத் தன் கால்களைப் பின்னுக்கு வாங்குவதைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஏற்ற காலம் பார்த்து ஆற்றல் மிக்கவன் காத்திருப்பது சண்டையிடும் ஆட்டுக்கடா, தன் பகைமீது பாய்வதற்காகப் பின்வாங்குவது போன்றதாகும்.

திருக்குறள் பா: 487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

kural 487: pollena aange puramveraar kaalampaarththu ulverppar olli yavar

திரு மு.வரதராசனார் பொருள்:
அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

மணக்குடவர் பொருள்:
கதுமென அவ்விடத்தே யுடம்பு வேரார்: தமக்குச் செய்யலாங் காலம் பார்த்து மனமொப்பர் ஒள்ளியர். ஒப்புப் பொறாமையால் வருவதொன்று. இது பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது.

கலைஞர் பொருள்:
பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்.

சாலமன் பாப்பையா பொருள்:
தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.

திருக்குறள் பா: 488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

kural 488: serunaraik kaanin sumakka iruvarai kaanin kizhakkaam thalai

திரு மு.வரதராசனார் பொருள்:
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.

மணக்குடவர் பொருள்:
பகைவரைக் கண்டானாயின் தலையினாற் சுமக்க; இறுமளவாகின் தலை கீழாய் விடலாம்.

கலைஞர் பொருள்:
பகைவர்க்கு முடிவு ஏற்பட்டு அவர்கள் தாமாகவே தலைகீழாகக் கவிழ்ந்திடும் உரிய நேரம் வரும் வரையில் தங்களின் பகையுணர்வைப் பொறுமையுடன் தாங்கிக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
பகைவர்க்கு அழிவுகாலம் வரும்வரை அவரைக் கண்டால் பணிக; அழிவுகாலம் வரும்போது தடை இன்றி அழிந்தபோவர்.

திருக்குறள் பா: 489
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.

kural 489: eydhar kariyadhu iyaindhakkaal annilaiye seydhar kariya seyal

திரு மு.வரதராசனார் பொருள்:
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.

மணக்குடவர் பொருள்:
பெறுதற்கு அரிய காலம் வந்தால் அப்பொழுதே தன்னாற் செய்தற்கு அரியவாகிய வினைகளைச் செய்து முடிக்க. இது காலம் வந்தால் அரிதென்று காணாமற் செய்யவேண்டு மென்றது.

கலைஞர் பொருள்:
கிடைப்பதற்கு அரிய காலம் வாய்க்கும்போது அதைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
அடைவதற்கு அரியதை அடைவதற்கு ஏற்ற காலம் வந்து விட்டால் அப்பொழுதே தான் செய்வதற்கு அரிய செயல்களைச் செய்து கொள்க.

திருக்குறள் பா: 490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.

kural 490: kokkokka koompum paruvaththu matradhan kuththokka seerththa itaththu

திரு மு.வரதராசனார் பொருள்:
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

மணக்குடவர் பொருள்:
காலம் பார்த்திருக்குமிடத்துக் கொக்குப் போல ஒடுங்கி இகழ்வின்றி யிருக்க, வினை செய்தற்கு வாய்த்த காலம் வந்தவிடத்து அக்கொக்குக் குத்துமாறுபோலத் தப்பாமல் விரைந்து செய்க. இது காலம் வருமளவும் இகழ்ச்சியின்றிக் கொக்குப் போல இருத்தல் வேண்டுமென்பதூஉம் காலம் வந்தால் தப்பாமை விரைந்து செய்யவேண்டுமென்பதூஉம் கூறிற்று.

கலைஞர் பொருள்:
காலம் கைகூடும் வரையில் கொக்குப்போல் பொறுமையாகக் காத்திருக்கவேண்டும். காலம் வாய்ப்பாகக் கிடைத்ததும் அது குறி தவறாமல் குத்துவது போல் செய்து முடிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா பொருள்:
ஒடுங்கி இருக்க வேண்டிய நேரத்தில் கொக்கைப் போல் ஒடுங்கிக் காத்து இரு. செயற்படும் நேரம் வந்தபோது கொக்கு தவறாமல் தன் இரையைக் குத்திப் பிடிப்பதுபோல் பிழையின்றிச் செய்து முடி.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan 30-01-2020 இன்றைய ராசி பலன் 30.01.2020 இன்றைய பஞ்சாங்கம் வியாழக்கிழமை Today Calendar 30/01/2020 Thursday Indraya Rasipalan
Next articleThirukkural Vali Arithal Adhikaram-48 திருக்குறள் வலியறிதல் அதிகாரம்-48 அரசியல் பொருட்பால் Arasiyal Porutpal in Tamil