தன்னம்பிக்கை Thannambikkai (Tamilpiththan kavithai-19)

0
648

எல்லோரும் கூப்பிடுகிறார்கள்
நான் நடந்து காட்ட வேண்டும்
என்பதற்காகவே யார் துணையும்
இன்றி தன்னம்பிக்கையுடன்
நம் முதல் அடியை
எடுத்து வைக்கிறோம்..!

பின் நாளில் எல்லோரும் நம்மை
இகழும் போது வாழ்ந்து
காட்ட வேண்டும் என்று
தன்னம்பிக்கையோடு
தனித்து அடி எடுத்து வைக்க
ஏன் தயங்க வேண்டும்..!

உங்கள் தாழ்வு மனப்பாங்கை
தூக்கி எறிந்துவிட்டு துணிவோடு
நடக்க கற்றுக்கொள்ளுங்கள்..!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்ப்பித்தன்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: