September 04 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 04

0

Today Special Historical Events In Tamil | 04-09 | September 04

September 04 Today Special | September 04 What Happened Today In History. September 04 Today Whose Birthday (born) | September-04th Important Famous Deaths In History On This Day 04/09 | Today Events In History September-04th | Today Important Incident In History | புரட்டாதி 04 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 04-09 | புரட்டாதி மாதம் 04ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 04.09 Varalatril Indru Nadanthathu Enna| September 04 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 04/09 | Famous People Born Today September 04 | Famous People died Today 04-09.

September 04
  • Today Special in Tamil 04-09
  • Today Events in Tamil 04-09
  • Famous People Born Today 04-09
  • Famous People died Today 04-09
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 04-09 | September 04

    குடியேறிகள் நாளாக கொண்டாடப்படுகிறது. (அர்கெந்தீனா)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 04-09 | September 04

    476ல் கடைசி மேற்கு உரோமைப் பேரரசர் ரொமூலசு ஆகுசுதுலசு முடிதுறந்தார். ஓடாசெர் இத்தாலியின் மன்னராகத் தன்னை அறிவித்தார். மேற்கு உரோமைப் பேரரசு முடிவுக்கு வந்தது.
    626ல் சீனாவின் தாங் மன்னராக தாய்சொங் முடிசூடினார்.
    929ல் சிலாவிக் படையினர் சாக்சனி இராணுவத்தினரால் பிரண்டென்பேர்க்கில் தோற்கடிக்கப்பட்டனர்.
    1282ல் அரகொனின் மூன்றாம் பீட்டர் சிசிலியின் மன்னராக முடி சூடினார்.
    1666ல் இலண்டனின் பெரும் தீ: இலண்டன் மாநகரில் மூன்று நாட்களாக இடம்பெற்ற பெரும் தீ விபத்தில் 13,000 இற்கும் அதிகமான வீடுகள் அழிந்தன.
    1774ல் ஜேம்ஸ் குக்கின் இரண்டாவது பயணத்தில் நியூ கலிடோனியா முதல்தடவையாக ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
    1781ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் 44 எசுப்பானியக் குடியேறிகளால் அமைக்கப்பட்டது.
    1800ல் மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் பிரெஞ்சுப் படைகள் பிரித்தானியரிடம் சரணடைந்தன. கோசோ மால்ட்டாவின் ஒரு பகுதியாக வந்தது.
    1812ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அரிசன் கோட்டை முற்றுகையின் போது கோட்டை தீக்கிரையாக்கப்பட்டது.
    1870ல் பிரெஞ்சுப் பேரரசர் மூன்றாம் நெப்போலியன் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள். பிரெஞ்சு மூன்றாவது குடியரசு அமைக்கப்பட்டது.
    1884ல் குற்றவாளிகளை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சுக்கு அனுப்பும் கொள்கையை பிரித்தானியா கைவிட்டது.
    1886ல் 30 ஆண்டுகள் போரின் பின்னர் அப்பாச்சி அமெரிக்கப் பழங்குடிகளின் தலைவர் யெரொனீமோ தனது படைகளுடன் அரிசோனாவில் சரணடைந்தார்.
    1888ல் ஜார்ஜ் ஈஸ்ட்மன் தான் கண்டுபிடித்த படம்பிடிகருவிக்கு ஈஸ்ட்மேன் கோடாக் என்பதை வர்த்தகக் குறியீடாகக் காப்புரிமை பெற்றுக் கொண்டார்.
    1912ல் உதுமானியப் பேரரசு அல்பேனியக் கிளர்ச்சியாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்கியதை அடுத்து கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
    1919ல் துருக்கிக் குடியரசை அமைத்த முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் அனத்தோலியா, திரேசின் எதிர்காலத்தை நிர்ணயிக்க மாநாடு கூட்டினார்.
    1923ல் அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வான்கப்பல் செனான்டோ சேவைக்கு விடப்பட்டது.
    1939ல் இரண்டாம் உலகப் போர்: செருமனி மீது பிரித்தானிய வான்படையின் முதல் தாக்குதல் இடம்பெற்றது.
    1941ல் இரண்டாம் உலகப் போர்: செருமானிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்காவின் கிரீர் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரை விடுவித்தன.
    1944ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் மீதான போரில் இருந்து பின்லாந்து விலகியது.
    1948ல் நெதர்லாந்தின் அரசி விலெல்மினா சுகவீனம் காரணமாக பதவியில் இருந்து விலகினார்.
    1951ல் கண்டங்களுக்கிடையேயான முதலாவது நேரடித் தொலைக்காட்சி யப்பானில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் இருந்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஒளிபரப்பப்பட்டது.
    1963ல் சுவிட்சர்லாந்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணஞ் செய்த அனைத்து 80 பேரும் உயிரிழந்தனர்.
    1970ல் சால்வடோர் அயேந்தே சிலியின் அரசுத்தலைவரானார்.
    1971ல் அலாஸ்காவில் போயிங் விமானம் ஜூனோ அருகில் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 111 பேரும் உயிரிழந்தனர்.
    1972ல் மார்க் ஸ்பிட்சு ஒரே ஒலிம்பிக் போட்டியில் ஏழு பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்தார்.
    1978ல் அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
    1975ல் அரபு-இசுரேல் முரண்பாடு குறித்த சினாய் இடைக்கால உடன்பாடு எட்டப்பட்டது.
    1985ல் கரிமத்தின் முதலாவது புலரின் மூலக்கூறு பக்மின்ஸ்டர்ஃபுலரின் கண்டுபிடிக்கப்பட்டது.
    1989ல் கிழக்கு செருமனியின் லைப்சிக் நகரில் மக்களாட்சி சீர்திருத்தத்திற்கு ஆதரவான முதலாவது ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
    1996ல் போதைப்பொருளுக்கு எதிரான போர்: கொலம்பியாவின் ஆயுதமேந்திய புரட்சிப் படை கொலம்பிய இராணுவத் தளம் மீது தாக்குதலை நடத்தியது. மூன்று வார கரந்தடிப் போரில் குறைந்தது 130 கொலம்பியர்கல் கொல்லப்பட்டனர்.
    1998ல் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகிய மாணவர்கள் கூகுள் நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
    2006ல் இசுரேலின் டெல் அவீவ் நகரின் பாடசாலை ஒன்றின் அடியில் கிமு 1ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு புதைகுழிக் குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
    2007ல் சூறாவளி ஃபீலிக்ஸ் நிக்கராகுவாவைத் தாக்கியதில் பலத்த நிலச்சரிவுகளும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன.
    2010ல் நியூசிலாந்தின் தெற்குத் தீவில் இடம்பெற்ற 7.1 அளவு நிலநடுக்கத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 04-09 | September 04

    973ல் பாரசீக மருத்துவரும் பல்துறையறிஞருமான‌ அல்-பிருனி பிறந்த நாள். (இறப்பு-1048)
    1824ல் ஆத்திரிய இசையமைப்பாளரான‌ ஆன்டன் புரூக்னர் பிறந்த நாள். (இறப்பு-1896)
    1825ல் இந்திய அரசியல்வாதியான‌ தாதாபாய் நௌரோஜி பிறந்த நாள். (இறப்பு-1917)
    1880ல் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான‌ பூபேந்திரநாத் தத்தர் பிறந்த நாள். (இறப்பு-1961)
    1888ல் செருமானிய ஓவியரும் சிற்பியும் வடிவமைப்பாளருமான‌ ஒஸ்கார் சலெமர் பிறந்த நாள். (இறப்பு-1943)
    1902ல் தமிழக இதழாசிரியரும் பாடகருமான‌ தி. சதாசிவம் பிறந்த நாள். (இறப்பு-1997)
    1926ல் ஆத்திரிய போதகரும் மெய்யியலாளரான‌ ஐவன் ஈலிச் பிறந்த நாள். (இறப்பு-2002)
    1927ல் அமெரிக்க கணினி அறிவியலாளரான‌ ஜோன் மெக்கார்த்தி பிறந்த நாள். (இறப்பு-2011)
    1941ல் ஆந்திராவின் 19வது ஆளுநரான‌ சுசில்குமார் சிண்டே பிறந்த நாள்.
    1952ல் இந்திய நடிகரான‌ ரிஷி கபூர் பிறந்த நாள்.
    1957ல் இலங்கை அரசியல்வாதியான‌ பைசல் காசிம் பிறந்த நாள்.
    1958ல் அமெரிக்க வானியலாளரான‌ ஜேக்குவிலைன் எவிட் பிறந்த நாள்.
    1962ல் நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவரான‌ சின்யா யாமானாக்கா பிறந்த நாள்.
    1962ல் இந்தியத் துடுப்பாளரான‌ கிரான் மோரி பிறந்த நாள்.
    1972ல் செர்பிய-கனடிய டென்னிசு வீரரான‌ டேனியல் நெஸ்டர் பிறந்த நாள்.
    1981ல் அமெரிக்க நடிகையும் பாடகியுமான‌ பியான்சே நோல்ஸ் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 04-09 | September 04

    422ல் திருத்தந்தையான‌ முதலாம் போனிஃபாஸ் இறப்பு நாள்.
    1323ல் சீனப் பேரரசரான‌ ஜெஜீன் கான் இறப்பு நாள். (பிறப்பு-1303)
    1809ல் செருமானிய-டச்சு பயண எழுத்தாளரான‌ யாக்கூப் ஆஃப்னர் இறப்பு நாள். (பிறப்பு-1754)
    1907ல் நோர்வே இசையமைப்பாளரான‌ எட்வர்டு கிரெய்கு இறப்பு நாள். (பிறப்பு-1843)
    1942ல் இலங்கை அரசியல்வாதியான‌ கே. பாலசிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1876)
    1965ல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரான்சிய-காபோனிய மதப்பரப்புனரும் மருத்துவருமான‌ ஆல்பர்ட் சுவைட்சர் இறப்பு நாள். (பிறப்பு-1875)
    1977ல் செருமானிய-ஆங்கிலேயப் பொருளியலாளரான‌ இ. எஃபு. ஷூமாசர் இறப்பு நாள். (பிறப்பு-1911)
    1990ல் அமெரிக்க வரலாற்றாளரான‌ லாரன்ஸ் ஏ க்ரீம் இறப்பு நாள். (பிறப்பு-1925)
    2006ல் ஆத்திரேலிய இயற்கை ஆர்வலரான‌ இசுடீவ் இர்வின் இறப்பு நாள். (பிறப்பு-1962)
    2007ல் தமிழகத் திரைப்பட நடிகையான‌ குமாரி ருக்மணி இறப்பு நாள். (பிறப்பு-1929)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleSeptember 03 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 03
    Next articleSeptember 05 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 05